“பெண்களை அப்படி காட்டுறோமா?.. சீரியலை நிறுத்த சொல்லிட்டாங்க!” ─ ‘எதிர்நீச்சல்’ இயக்குநர் Exclusive
முகப்பு > சினிமா செய்திகள்சன் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. மக்கள் மத்தியில் இன்று வரை பேசப்பட்டு வரக் கூடிய 'கோலங்கள்' தொடரை எடுத்ததுடன், 'கோலங்கள்' சீரியலில் அனைவரின் மனம் கவர்ந்த தொல்ஸ் (தொல்காப்பியன்)என்கிற கேரக்டரில் நடித்தவரான, இயக்குநர் திருச்செல்வம் தான், 'எதிர்நீச்சல்' தொடரையும் தற்போது இயக்கி வருகிறார்.
Also Read | அட.. நம்ம இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் !!! வைரலாகும் சிறுவயது ஃபோட்டோ..!
இந்த சீரியலில் இடம்பெற்றிருந்த காட்சி ஒன்று, தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் சர்ச்சையை ஏற்படுத்தியதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த காட்சியின் உண்மை பின்னணி குறித்தும், சிலர் மத்தியில் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது குறித்தும் எதிர்நீச்சல் சீரியலின் இயக்குநர் திருச்செல்வம் பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பிரத்தியேகமாக பேசியுள்ளார்.
அதில், “இந்த சீரியலில் பெண்களை பிற்பகத்தனமாக காட்டுகிறீர்களா? அப்படியான விமர்சனங்கள் குறித்து உங்களுடைய பார்வை என்ன?” என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த இயக்குநர் திருச்செல்வம், “அப்படி எல்லாம் இல்லை, ஒரு விஷயத்தை சீரியலாக காட்சிப்படுத்துகிறோம். அப்படி சில பிற்போக்கு தனங்கள் காணப்பட்டால் அப்படித்தான் அந்த வீட்டு ஆண்கள் அந்த பெண்களை வைத்திருக்கிறார்கள் என்பதையே அங்கு காட்ட முயற்சிக்கிறோம். 8 வயது முதல் 80 வயது பெண்கள் வரை அனைவருக்குமான அழுத்தம் இருக்கிறது, அதையே காட்சிப்படுத்துகிறோம். ஒரு சின்ன குழந்தையை கூட இப்படி உட்காரு.. இப்படி பேசு என்று பெரிய பெண்கள் சொல்லிக்கொடுக்க முயற்சிப்பது உண்டு. அவர்களும் கூட இன்று எனக்கு போன் பண்ணி தானும் ஒரு காலத்தில் அப்படி இருந்ததாக கூறுவதை காண முடிகிறது.
இந்த சீரியலில் ஒரு காட்சி வரும். ஒரு செல்போனில் ஜிஎஸ்டி குறித்த விஷயங்களை பார்த்து தெரிந்து கொண்டிருக்கும் அந்த பெண் கதாபாத்திரம், ஆனால் அந்த வீட்டு ஆண் கதாபாத்திரத்துக்கு கையில் ஆண்ட்ராய்டு போன் இருந்தும் அது பற்றி தெரியாது. அப்போது அந்த போனை எதற்கு தான் வைத்திருக்கிறார் என்று அந்த பெண் கதாபாத்திரம் விமர்சிப்பதை பார்க்க முடியும். அந்த போனில் இருக்கும் நல்ல பயன்பாடுகள் எப்படி பயன்படுத்தப்படாமல் அல்லது அதன் பயன்பாடே தெரியாமல் ஒருவரது கையில் அந்த போன் இருக்கிறதோ... அப்படியே பல பெண்கள் தங்களுடைய திறமைகள் முடக்கப்பட்டு வீட்டில் இருத்தி வைக்கப்படுகின்றனர், குடும்பத்துகுள்ளேயே இது இருக்கிறது என்பதைத்தான் இந்த சீரியல் அழுத்தம் திருத்தமாக சொல்கிறது.
இந்த சீரியலையே நிறுத்தச் சொல்லி கடிதம் எழுதினார்கள், ஒரு ரிப்போர்ட் மாதிரி வந்தது. காரணம் கூட்டுக் குடும்பத்துக்குள் பிரச்சனை வந்துவிடும் போலிருக்கிறது என்று கூறுகிறார். ஏனென்றால், தினமும் இரவு இந்த சீரியலை பார்த்துவிட்டு அவரது மனைவி, தன்னை ஜனனியாகவும், அவரை குணசேகரனாகவும் பாவித்து சமீப காலமாக நடப்பதாக குறிப்பிட்டிருந்தார். அப்படியானால் அவர் குணசேகரன்தானே? இன்னும் பல பெண்கள் தாங்கள், பிற்போக்குக்குள் முடக்கப்பட்டு, அழுத்தத்துடன் இருப்பதையே உணராமல் இருக்கிறார்கள். அதை இந்த சீரியலால் பலரும் உணர்வதாக எங்களிடம் தெரிவிப்பதை இந்த சீரியலின் வெற்றியாக நான் பார்க்கிறேன். விமர்சனங்கள் எப்போதுமே வர வேண்டும், ஆனால் முழுமையாக என்ன செய்திருக்கிறோம் என்று அறிந்து கொண்டு அதன் மீதான விமர்சனங்கள் வர வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
Also Read | “அம்மாவ பார்த்துக்கங்க”.. குடும்பம், குழந்தைகள் பற்றி சன்னி லியோன் அட்வைஸ்..! Exclusive
“பெண்களை அப்படி காட்டுறோமா?.. சீரியலை நிறுத்த சொல்லிட்டாங்க!” ─ ‘எதிர்நீச்சல்’ இயக்குநர் EXCLUSIVE வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய இணைப்புகள்
- எதிர்நீச்சல் சீரியலுக்கு ஏற்பட்ட TWIST! - இயக்குனர் திருச்செல்வம் OPEN TALK
- "செருப்பே College போகும் போது தான் போட்டேன்.!" நடிகர் மாரிமுத்து EMOTIONAL பேட்டி
- "நல்லவரா கெட்டவரா-னு தெரியாத மாறி அந்த CHARACTER பண்ணேன்" - நடிகர் MAARIMUTHU
- "நான் AUNTY மாதிரி இருந்தா உங்களுக்கென்ன.." கடுப்பாகி திட்டிய HARIPRIYAA
- "மூஞ்சியும் முகரகட்டையும் பாரு, அறிவில்ல..?" வெளுத்து வாங்கிய Marimuthu | Ethirneechal
- Metti Oli மாறி Serial காட்டுங்க நடிக்கிறேன்
- Metti Oli செல்வம் ஞாபகம் இருக்கா... “ரொம்ப வருஷம் ஆச்சு Camera முன் வந்து...” - Kolangal Vishwa
- Aadhi Character-க்கு இவர் தான் Reference...6 Years கோலங்கள் Secrets| Ajay Kapoor Nostalgic Interview
- "ரொம்ப மோசமா இருக்கு Madam-னு சொல்லுவாங்க" - கோலங்கள் "Menaka" Poornima Indrajith Reveals | MY
- Kolangal - 1,533 Episodes | List Of Longest Running Tamil Television Series - Over 1000 Episodes - Slideshow