www.garudabazaar.com

தெறிக்கவிட்ட சமந்தா! .. “மாமா”-னு ஒரே வார்த்தை தான்.. ஒட்டு மொத்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா தமிழில் முன்னணி நடிகையாக அறியப்படுபவர். தமிழில் பாணா காத்தாடி உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பிரபலமான சமந்தா, கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில், முக்கியமான கேமியோ ரோலில் நடித்தார்.

samantha one tweet slams rumours over her married life

அதன் பிறகு தளபதி விஜய்யுடன் கத்தி, தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த சமந்தா, ராஜமவுலி இயக்கத்தில் ‘நான் ஈ’ திரைப்படத்தில் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்றார். தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருந்துவரும் சமந்தா ‘ஓ பேபி’, ‘யூ டர்ன்’ உள்ளிட்ட பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இதனிடையே சமந்தா நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் அண்மையில் கலந்துகொண்ட சந்திப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், தனது செல்ல நாய்க்குட்டிகளுடன் தான் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இணையத்தில் இந்த புகைப்படங்கள் வைரலாகின.

நடிகை சமந்தா, தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் சமந்தாவும் இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில், அண்மையில் வெளியான ‘டூ டூ டூ’ எனும் பாடல் பல லட்சம் வியூவ்ஸ்களை கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

அண்மைக்காலமாகவே சமந்தா மற்றும் அவரது கணவரும் நடிகருமான நாக சைத்தன்யா இருவருக்கும் இடையே பிளவு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன. நடிகை சமந்தாவும் நாக சைத்தன்யாவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். சமந்தாவின் சில திரைப்படங்களில் நாக சைத்தன்யா கேமியோ ரோலில் வந்தும் அசத்துவார்.

சில வருடம் முன்பு விக்ரம்.கே.குமார் இயக்கத்தில் உருவான ‘மனம்’ திரைப்படத்தில் நடிகர் நாகேஸ்வர ராவ், அவரது மகன் நடிகர் நாகார்ஜூனா, நாகார்ஜூனாவின் மனைவியும் திரைப்பட நடிகையுமான அமலா, இவர்களது மகனும் நடிகருமான நாக சைத்தன்யா, இன்னொரு மகனும் நடிகருமான அகில் மற்றும் நாக சைத்தன்யாவின் மனைவியும் நடிகையுமான சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். 

இவர்களது குடும்பத்தை அக்கினேனி குடும்பம் என்கிற குடும்பப் பெயர் கொண்டு அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகை சமந்தா திருப்பதி கோவிலுக்கு வருகை தந்தபோது, நிரூபர் ஒருவர் இதுபற்றி கேட்கவும் கடுப்பான சமந்தா, ‘எங்க வந்திருக்கேன்? எங்க வெச்சு என்னவெல்லாம் கேக்குறீங்க?’ என்பது போல் பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில்தான் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது போல், தெலுங்கில் நாகார்ஜூனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், தமது மறைந்த தந்தை நாகேஸ்வர ராவ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி பேசத் தொடங்கினார். மேலும் தமது தந்தையே தமக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் நாகார்ஜூனா கூறியிருந்தார்.

இந்த ட்வீட்டுக்கு, ‘திஸ் ஈஸ் சோ பியூட்டிஃபுல்’ என முதலில் கமெண்ட் கொடுத்த சமந்தா, கொஞ்ச நேரத்தில் அந்த கமெண்டை டெலிட் செய்துவிட்டு, மீண்டும் பதிவிட்ட ட்வீட்டில், “திஸ் ஈஸ் சோ பியூட்டிஃபுல் மாமா” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சமந்தாவின் ட்வீட், சமீபத்திய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், அவரது குடும்ப ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலும் இருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் கூறி வருகின்றனர். 

Also Read: குக் வித் கோமாளி மணிமேகலை-க்கு நடந்த Accident-ஆ? - என்ன ஆச்சு?.. அவரே வெளியிட்ட பரபரப்பு photos & Video!

தொடர்புடைய இணைப்புகள்

samantha one tweet slams rumours over her married life

People looking for online information on Naga chaitanya, Nagarjuna, Samantha will find this news story useful.