www.garudabazaar.com

BREAKING: சமந்தா நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கும் சூர்யா, கார்த்தி பட தயாரிப்பாளர்? யார்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

actress samantha next with suriya karthi producer?

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கிய மாஸ்கோவின் காவேரி படம் மூலம் தமிழ் சினிமாவில அறிமுகமானார். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ படங்களில் நடித்து வருகிறார். 

actress samantha next with suriya karthi producer?

சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வரும் சமந்தா தற்போது டீரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதியபடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சூர்யாவை (Suriya) வைத்து NGK படத்தையும், கார்த்தியை (Karthi) வைத்து சகுனி, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, சுல்தான் படங்களையும் தயாரித்துள்ளது.

actress samantha next with suriya karthi producer?

இந்த புதிய படம் Women Centric படமாக உருவாகிறது. சமந்தா ஏற்கனவே யூ டர்ன் படத்தின் தமிழ் ரீமேக்கில் இது போல் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் பணிபுரியும் படக்குழு விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Tags : Samantha

actress samantha next with suriya karthi producer?

People looking for online information on Samantha will find this news story useful.