www.garudabazaar.com

'RRR' எப்போ வருது??.. ஒன்றுக்கு ரெண்டு ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு! இதுக்கு மேல என்ன வேணும்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜமவுலி இயக்கத்தில், ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த 'RRR' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

RRR team officially announce the new release date

கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வந்த நிலையில், டிசம்பர் மாத இறுதியில் இருந்தே, மீண்டும் வேகம் எடுக்க ஆரம்பித்தது.

அது மட்டுமில்லாமல், இன்னொரு பக்கம் ஒமைக்ரான் தொற்றும், பல நாடுகளில் வேகமாகி பரவி, கடுமையாக அச்சுறுத்தலை மேற்கொண்டு வருகிறது.

ஊரடங்கு கட்டப்பாடு

இதன் காரணமாக, பல உலக நாடுகள், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது. இந்தியாவிலும், கொரோனா தொற்று அதிகமுள்ள பல மாநிலங்கள், இரவு நேர ஊரடங்கையும், பொது இடங்களில் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தது. அதே போல, திரையரங்குகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

தள்ளிப் போன வலிமை

இதன் காரணமாக, ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருந்த சில பெரிய இந்திய திரைப்படங்கள், தங்களது ரிலீஸை தள்ளி வைத்தது. தமிழில் அஜித் குமார் நடித்த 'வலிமை' திரைப்படம், பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 13 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ரிலீஸ் தேதியை படக்குழு தள்ளி வைத்தது.

RRR team officially announce the new release date

'RRR' ரிலீஸ் எப்போது?

அதே போல, தெலுங்கு திரைப்படங்களான 'ராதே ஷியாம்' மற்றும் 'RRR' ஆகிய பெரிய படஜெட் திரைப்படங்களும் ரிலீஸை தள்ளி வைத்திருந்தது. இந்நிலையில், 'RRR' படக்குழு, படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. மகதீரா, பாகுபலி, பாகுபலி 2 உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களை உருவாக்கிய ராஜமவுலி இயக்கத்தில், தயாரான திரைப்படம் தான் 'RRR'.

RRR team officially announce the new release date

இரண்டு ரிலீஸ் தேதி

இந்த திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் அலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். டிரைலர் வெளியான நாள் முதலே படத்தினை மீதான எதிர்பார்ப்பு, மிகப் பெரிய அளவில் அதிகரித்திருந்தது. ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்றின் காரணமாக படம் தள்ளிப் போனது. இதனையடுத்து, தற்போது இந்த படத்திற்கு 2 ரிலீஸ் தேதிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

RRR team officially announce the new release date

அசத்தல் அறிவிப்பு

'நாட்டிலுள்ள கொரோனா தொற்று பரவலின் நிலை சரியாகி, அனைத்து திரையரங்குகளும் முழுமையாக திறக்கப்பட்டால், நாங்கள் மார்ச் 18 ஆம் தேதி படத்தினை வெளியிட தயாராக உள்ளோம். இல்லையென்றால், 'RRR' திரைப்படம், ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளிவரும்' என அறிவித்துள்ளது.

 

 

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, படத்திற்கு இரண்டு ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 'RRR' படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

RRR team officially announce the new release date

People looking for online information on Ajith Kumar, Alia Bhatt, Junior NTR, Prabhas, Ram Charan, RRR, S S Rajamouli, Valimai will find this news story useful.