www.garudabazaar.com

Exclusive : ட்ரைலர்ல வந்ததே மிகப்பெரிய சந்தோஷம்.. "வலிமை" ஜாக் ராபின்சன் ஓபன் டாக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : வலிமை படத்தில் நடித்த தனது அனுபவத்தையும், படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் எஸ்க்க்ளுசிவ் நேர்காணல் மூலம் கூறியுள்ளார்.

 

Jack Robinson shares his valimai work experiences

வலிமை அப்டேட்  மட்டுமே

என்னை அறிந்தால், தனி ஒருவன், போன்ற படங்களில் நடித்த ஜாக் ராபின்சன் தற்போது அவர் நடிக்கும் வலிமை படத்தை பற்றி பகிர்ந்துள்ளார். படத்தை எப்போ ரிலீஸ் பண்ணுவீங்களா என அஜித் சார் மேனேஜர் மற்றும் படத்தில் வேலை செய்தவர்களுக்கு கால் செய்து கேட்பேன். ஏனென்றால் தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு இப்படி பட்ட எதிர்பார்ப்பை நான் கேள்விப்பட்டதில்லை. எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் தான் கேட்கிறார்கள். கிரிக்கெட் ஸ்டேடியம் முதற்கொண்டு அதுதான் கேள்வியாக இருந்து வந்தது.

Jack Robinson shares his valimai work experiences

பைக் ஸ்டன்ட்

ட்ரெய்லரில் பார்க்கும்போது என்னடா இது புதுசா இருக்கிறது என்று தெரிந்தது. இந்தப் படம் என்ன கதை என்று யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் வித்தியாசமான கதை என்று மட்டும் கூறினார்கள். பின் ட்ரெய்லரில் பார்த்தபின் படம் முழுவதும் பைக் ஸ்டன்ட் காட்சிகள் இருக்கும் என்று தெரியவந்தது. அதனால் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும். மேலும் நான் அஜித் சார், வண்டி ஓட்டுவதை மங்காத்தா படத்திலே பார்த்திருக்கிறேன். அதனால் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இப்படம் வெளியாக இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. ஆனால் ஜனவரி 13 எப்போ வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்.

மிரட்டப் போகுது!! ஐஸ்வர்யா ராஜேஷின் "தி கிரேட் இந்தியன் கிச்சன்".. வெளியான அடுத்த அப்டேட்!

இரண்டாவது படம்

Jack Robinson shares his valimai work experiences

நான் நடித்துக் கொண்டிருக்கும்போது படத்தில் பாடல் இருக்கின்றதா என்று கூட எனக்கு தெரியாது. என்னுடன் அண்ணன் கதாபாத்திரத்திற்கும், தம்பி கதாபாத்திரத்திற்கும் மேலும் அம்மாவாக ஒருவர் நடித்திருந்தார்கள். அது மட்டுமே எனக்கு தெரியும். அதன்பின் எனக்கு பயமாகவும் இருந்தது. ஏனென்றால், நான் அஜித் சாருடன் இரண்டாவதாக இணைகிறேன். படப்பிடிப்பில் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒவ்வொரு ஷாட்டையும் பார்த்து பார்த்து பண்ணுவார். எனக்கு நடிக்க மட்டும்தான் தெரியும். ஆனால் H.Vinoth இயக்குனர் எதிர்ப்பார்க்கும் விதமாக நமக்கு கொடுக்க முடியுமா என்பது தெரியவில்லை. என்னை அறிந்தால் படத்தில் நடித்திருப்பேன். அதை வைத்து தான் என்னை இந்த படத்தில் தேர்வு செய்தார்கள்.

Jack Robinson shares his valimai work experiences

ஒன்றுமே தெரியாது

வலிமை படத்திற்கு என்னை அழைத்த போது எனக்கு மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அஜித் சாருடன் இரண்டாவது முறை இணையும் போது  எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் உடனே பண்ணிட வேண்டியது தான் என நினைத்தேன். வலிமை படத்தின் ட்ரெய்லர் வெளிவரும்போது எனது நண்பன் அதை பார்த்து எனக்கு கால் செய்து, "வலிமை படத்தில் நடித்து இருக்கியா சூப்பர் மச்சான்"எனக் கூறினார்.

Jack Robinson shares his valimai work experiences

எனக்கு வலிமை ட்ரைலர் 6:30  மணிக்கு வெளியானது தெரியாது. அதன் பின் உடனே கால் கட் செய்துவிட்டு நான் வலிமை ட்ரைலரைப் பார்த்தேன். அதில் நான் இருந்தது மிகப்பெரிய சந்தோஷமாக இருந்தது. ஏனென்றால் இதற்கு முன்பு "திமிரு புடிச்சவன்"படத்தில் மட்டும் ட்ரெய்லரின் வந்து இருப்பேன். அதன்பின் அஜித் சார் படத்தில் உள்ள ட்ரைலரில் வரும் போது மிகப்பெரிய சந்தோசமாக இருந்தது எனக் கூறினார்.

இன்னைக்கு தான் புஷ்பா படம் பார்த்தேன்.. நாட்டாமை கொடுத்த 'நச்' தீர்ப்பு!

பார்த்ததே இல்லை

Jack Robinson shares his valimai work experiences

நான், என்னை அறிந்தால் படத்தில் நடிக்கும்போதே அஜித் சாரை நேரில் பார்க்கவில்லை. அருண் விஜய் சாரை மட்டுமே பார்த்தேன். ஆனால் வலிமை படத்திலும் அவரை பார்க்கவில்லை. விரைவில் பார்ப்பேன். இப்படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு அஜித் சார் மற்றும் H.Vinoth சாருக்கு மிகப்பெரிய நன்றி சொல்ல வேண்டும், என்று சந்தோஷமாக தனது அனுபவங்களை பகிர்ந்தார்.

EXCLUSIVE : ட்ரைலர்ல வந்ததே மிகப்பெரிய சந்தோஷம்.. "வலிமை" ஜாக் ராபின்சன் ஓபன் டாக்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Jack Robinson shares his valimai work experiences

People looking for online information on Ajith Kumar, பைக் ஸ்டன்ட், வலிமை, Jack Robinson, Valimai, Valimai work experiences will find this news story useful.