www.garudabazaar.com

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு! காரணம் என்ன? முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Chennai : தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Ajith AK Valimai Movie Postponed from Pongal Release

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கின. 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவியது. குறிப்பாக தென் மாவ்ட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வந்தன. மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டன.

Ajith AK Valimai Movie Postponed from Pongal Release

வலிமை படம் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனை முன்னிட்டு 'வலிமை' படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகம், டெல்லி, போன்ற மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதியில் இருந்து 50% பார்வையாளர்களாக குறைக்கப்பட்டுள்ளது. பீகார் போன்ற மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில்  ஜனவரி மாதம் 1 முதல் ஜனவரி 10 வரை தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு (பார்வையாளர்கள்) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் மூன்றாவது அலை ஒமிக்ரான் பரவலும் அதிகரித்துள்ளது, இந்த காரணிகள் படத்தின் வசூலை பாதிக்கலாம். இதன் காரணமாக ரிலீஸ் தேதி (13.01.2022) இருந்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Ajith AK Valimai Movie Postponed from Pongal Release

இது குறித்து போனி கபூர் டிவிட்ட்ரில் " பார்வையாளர்களும் ரசிகர்களும் எப்பொழுதும் எங்களின் மகிழ்ச்சியின் ஆதாரமாக இருந்துள்ளனர். கடினமான காலங்களில் அவர்களின் நிபந்தனையற்ற ஆதரவும் அன்பும், இன்னல்களை எதிர்கொள்வதற்கும், எங்களின் கனவுத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் முக்கியமான நம்பிக்கைகளை நமக்குள் விதைத்தது. சினிமா அரங்குகளில் அவர்களை மகிழ்ச்சியாகவும் பார்க்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தருணத்திலும் நாங்கள் விரும்பியது. அதே நேரத்தில், எங்கள் பார்வையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு எப்போதும் எங்கள் எல்லா முடிவுகளிலும் முன்னணியில் உள்ளது. உலகம் முழுவதும் கோவிட் தொற்றுகள் அதிகரித்து வருவதாலும், அரசின் விதிமுறைகளுக்கு இணங்குவதாலும், எங்கள் திரைப்படமான 'வலிமை' படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். தடுப்பூசி போட்டு, முகமூடி அணிந்து பாதுகாப்பாக இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்!" என கூறியுள்ளார்.

Ajith AK Valimai Movie Postponed from Pongal Release

இந்த படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith AK Valimai Movie Postponed from Pongal Release

People looking for online information on Ajith Kumar, அஜித் குமார், வலிமை ட்ரெய்லர், H Vinoth, Pan India Valimai, Valimai, Valimai Postponed, Valimai Release, Valimai release date, Valimai Tamil, Valimai trailer will find this news story useful.