www.garudabazaar.com

தியேட்டரில் தெறிக்க விட்ட ’நாட்டுக்கூத்து’ பாடல்… வெளியான செம்ம அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டுக்கூத்து பாடலின் வீடியோ இன்று இணையத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RRR Naatukoothu video song releasing today

”ஷூட்டிங்குக்கு ரெண்டு நாள் முன்னாடி… என்ன பழிவாங்கன்னே”… மாளவிகா மோகனின் செம்ம status!

RRR படக்குழு….

பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ரிலீசாகியுள்ள படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளராக கீரவாணி பணியாற்றினார்.

RRR Naatukoothu video song releasing today

இமாலய வசூல் சாதனை…

RRR படம் முதல் நாளில் 223 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலாக ஈட்டியது. இது பாகுபலி படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் ஆகும். அதேபோல் முதல் மூன்று நாளில் 500 கோடி ரூபாயை மொத்த வசூலாக ஈட்டியது. ஒரு வாரத்தில் இந்த படம் 710 கோடி ரூபாயை மொத்த வசூலாக உலகம் முழுவதும் வசூலித்து உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது இந்த படம் வெளியானது முதல் 16 நாட்களில் உலகளவில் பாக்ஸ் ஆபீஸீல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அது கவனத்தை ஈர்த்து வருகிறது.

RRR Naatukoothu video song releasing today

நாட்டுக்கூத்து….

RRR படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலின் லிரிக் வீடியோ படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி கவனத்தை ஈர்த்தது. திரையரங்கிலும் இந்த பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகிய இருவரின் மின்னல் வேக நடனம் ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி திரையரங்கில் ஆட வைத்தது. இந்நிலையில் தற்போது இந்த பாடலின் வீடியோ இன்று மாலை 4 மணிக்கு இணையத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

”என்ன ப்ரோ all okay”… சதீஷ் படத்தின் போஸ்டருக்கு மிர்ச்சி சிவாவின் செம்ம ரியாக்ஷன்!

தொடர்புடைய இணைப்புகள்

RRR Naatukoothu video song releasing today

People looking for online information on Jr ntr, Ramcharan, RRR, RRR Naatukoothu Song, SS Rajamouli will find this news story useful.