www.garudabazaar.com

'அண்ணாத்த' ஷூட்டிங் எந்த நிலைமையில் இருக்கு?.. ஃபர்ஸ்ட் லுக் எப்போ வருது தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் திரைப்படம் அண்ணாத்த.

Rajini Annaatthe shoot wrap FL update massive ரஜினி அண்ணாத்த

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியன் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, டி.இமான் இசையமைக்கிறார்.

முன்னதாக தமது ட்விட்டர் பக்கத்தில், அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்தின் நகைச்சுவை காட்சிகள் பற்றி பதிவிட்ட  குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியன், அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள நகைச்சுவை காட்சிகள் அவருடைய பொன்னான காலங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் என குறிப்பிட்டிருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.

இதனிடையே ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் அண்ணாத்த படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த நேரத்தில் ரஜினிகாந்துக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. எனினும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் சிகிச்சை மேற்கொண்ட ரஜினிகாந்த் பிறகு சென்னை வந்தடைந்தார்.

அதன் பின்னர் சென்னையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே 10ஆம் தேதி முழுமையாக நிறைவடையும் என்று புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அத்துடன் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

ALSO READ: “இத பாக்கும் போதெல்லாம் அழுகை வருது!”... பிரபல காமெடி நடிகர் உருக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Rajini Annaatthe shoot wrap FL update massive ரஜினி அண்ணாத்த

People looking for online information on Annaatthe, D Imman, Rajinikanth, Siruthai Siva will find this news story useful.