Reliable Software
www.garudabazaar.com

"சம்பவம் Loading...".. ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்து வெளியான தெறிக்கவிடும் Photo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வீரம், விவேகம், விஸ்வாசம் என அஜித் நடித்த படங்களை இயக்கி புகழ் பெற்ற சிவா, கார்த்தியின் நடிப்பில் உருவான சிறுத்தை எனும் வெற்றிப்படத்தை கொடுத்ததன் மூலம் தமிழ், தெலுங்கு உலகில் அறிமுகமானார்.

Rajini Siva Annaatthe viral shooting pic Hyderabad ரஜினி அண்ணாத்த

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா. முன்னதாக அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்துகொண்டிருந்த போது படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் ரஜினிக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

அதே சமயம் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்றுவந்தார். பின்னர் குணமான ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அதன் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படப்பிடிப்பு முழுவீச்சில்  நடந்து வருகிறது.

ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடிக்கும் இப்படத்தில் சூரி முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.  டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா இடம் பெறும் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ALSO READ: "ஆத்தோவ்.. அண்ணோவ்.. திட்டாதீங்கப்பா.. முடியல!" .. கதறும் 'கர்ணன்' கண்ணபிரான்!

தொடர்புடைய இணைப்புகள்

Rajini Siva Annaatthe viral shooting pic Hyderabad ரஜினி அண்ணாத்த

People looking for online information on Annaatthe, Rajinikanth, Siruthai Siva, Sun pictures will find this news story useful.