Reliable Software
www.garudabazaar.com

Video: "சிவனோட ஒரு சிட்டிங்...எமனோட ஒரு கட்டிங்".. பரவும் விவேக்-ன் மாஸ் பேச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4:35 மணிக்கு பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவு பற்றிய அதிர்ச்சி செய்தியை கேட்டு பலர் சோகத்தில் ஆழ்ந்தனர்.  இந்த இழப்பு திரைத் துறைக்கு மட்டும் அல்ல, இந்த தமிழ்ச் சமூகமும் ஒரு சிறந்த மனிதரை இழந்து விட்டது என பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர்.

vivek old viral speech darbar audio launch rajinikanth

மறைந்த நடிகர் விவேக்கிற்கு வயது 59.  வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், தமது குடும்பத்தினரால் மயக்க நிலையில் கொண்டு செல்லப்பட்ட அவர், சென்னை வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சைகள், எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

vivek old viral speech darbar audio launch rajinikanth

இந்நிலையில் அவரது உடலுக்கு திரைத்துரையினரும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வர, இன்னொருபுறம் விவேக்கிற்கு அரசு முறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KADHAL THERAPY (@kadhal__therapy)

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் ஆடியோ விழாவில் நடிகர் விவேக் பேசிய வீடியோவை இணையத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதில் விவேக், ரஜினியை பார்த்து, “தலைவரு சிவனோட சிட்டிங் போட்டு வர்றாரு.. எமனோட ஒரு கட்டிங் போட்டும் வர்றாரு... நாமளும் நைசா ஒரு பால் போட்டு பாத்தா.. அப்டியா எனக்கு தெரிலயேனு சொல்றாரு” என கலகலப்பாக பேசுகிறார்.

விவேக்கின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்தும் தமது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ALSO READ: "மரணம் சிரிப்பை திருடிக் கொண்டது!"..'விவேக் மறைவுக்கு' ரஜினி, வைரமுத்து அஞ்சலி!

தொடர்புடைய இணைப்புகள்

vivek old viral speech darbar audio launch rajinikanth

People looking for online information on Darbar, Rajinikanth, Vivekh will find this news story useful.