Reliable Software
www.garudabazaar.com

"நீர் என் அருகில் இருக்கும் வரை".. பாகுபலி ஸ்டைலில் புகழ் மாஸ் பஞ்ச்.. யாரை சொல்றாரு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் புகழ். பின்னாட்களில் விஜய் டிவி புகழ் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.

pugazh trending pic and post with vijay tv programming head

தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களிடையே இன்னும் பிரபலம் அடைந்தார். இதற்கு காரணம் தனக்கே உரிய மிடுக்கான நகைச்சுவை இயல்பை புகழ் வெளிப்படுத்துவது தான். இதனால் அவருக்கு இப்போது ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர்.

தொடர்ந்து புகழ் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அஸ்வின் டிரைடன்ட்ஸ் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடிக்கவிருக்கும் தம்முடைய முதல் வெள்ளித் திரைப் படத்தில் அவருடன் இணைந்து காமெடி ரோலில் புகழ் நடிக்கிறார்.

ஏற்கனவே புகழ், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடித்து வெளியான திரைப்படத்தில் நடித்த காட்சிகள் தற்போது வெளியாகி ட்ரெண்ட் ஆகி வரும் சூழ்நிலையில் இன்னும் புகழ் 7க்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகியிருப்பதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் விஜய் சேதுபதியின் 46வது திரைப்படத்தில் புகழ் நடிக்கிறார். இந்த நிலையில் புகழ், விஜய் டிவியின் பிரபல புரோகிராமிங் ஹெட் பிரதீப் மில்ராய் அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “நீர் என் அருகில் இருக்கும் வரை என்னை கொல்லும் ஆண் மகன் இன்னும் பிறக்கவில்லை தலைவா!” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.

ALSO READ: "நீதிக்காக அயராது போராடியவர்!".. டிராபிக் ராமசாமி மறைவு குறித்து கமல்ஹாசன் உருக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

pugazh trending pic and post with vijay tv programming head

People looking for online information on Baahubali, Pugazh, VijayTv Pugazh will find this news story useful.