Reliable Software
www.garudabazaar.com

Video: "நீ நட்ட மரமெல்லாம் ஆக்ஸிஜன் தர காத்திருக்கு!".. Vijay TV புகழ் பதிவு.. நேரில் சென்று அஞ்சலி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4:35 மணிக்கு பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவு பற்றிய அதிர்ச்சி செய்தியை கேட்டு பலர் சோகத்தில் ஆழ்ந்தனர்.  இந்த இழப்பு திரைத் துறைக்கு மட்டும் அல்ல, இந்த தமிழ்ச் சமூகமும் ஒரு சிறந்த மனிதரை இழந்து விட்டது என பிரபலங்கள் கருத்து கூறி வருகின்றனர்.

vijay tv pugazh pays last respect actor vivekh emotional post

மறைந்த நடிகர் விவேக்கிற்கு வயது 59.  வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில், தமது குடும்பத்தினரால் மயக்க நிலையில் கொண்டு செல்லப்பட்ட அவர், சென்னை வடபழனி, சிம்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக  அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சைகள், எக்மோ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.

இந்நிலையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த நடிகர் புகழ், விவேக் அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு, நடிகர் விவேக்கிற்கு தமது அஞ்சலியை செலுத்தினார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijay Tv Pugazh (@vijaytvpugazh)

அத்துடன் தமது பதிவில், “அனைவரும் சுவாசிக்க ஆக்ஸிஜன் வேண்டுமென....அத்தனை மரங்கள் நட்டாயே.....இன்று உன் நாசிக்கு செயற்கை சுவாசமா......சின்ன கலைவாணரே....எழுந்து வா.....நீ நட்ட மரமெல்லாம்.....உனக்கு ஆக்ஸிஜன் தர காத்திருக்கிறது.... திரையுலகமே..... சோகத்தில்.....உன் பிரிவை....ஏற்க முடியாமல்.... விடைப்பெற்றார்!” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: ஜென்டில்மேன் படத்தில் அந்த வசனத்தை நினைவுகூர்ந்த ஷங்கர்! 'விவேக்' மறைவுக்கு அஞ்சலி!

VIDEO: "நீ நட்ட மரமெல்லாம் ஆக்ஸிஜன் தர காத்திருக்கு!".. VIJAY TV புகழ் பதிவு.. நேரில் சென்று அஞ்சலி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vijay tv pugazh pays last respect actor vivekh emotional post

People looking for online information on புகழ், Pugazh, RIPVivekhSir, Vijay Tv Pugazh, Vivekh will find this news story useful.