Lal SIngh D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

திருச்சிற்றம்பலம் படத்துக்காக GAME விளையாடிய பிரியா பவானி சங்கர்.. SUN PICTURES வெளியிட்ட அசத்தலான VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸை ஒட்டி பிரியா பவானி சங்கர் தோன்றும் கேம் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Priya bhavani Shankar played a game for Thiruchitrambalam Movie

Also Read | 'திருச்சிற்றம்பலம்' படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமம்.. கைப்பற்றிய பிரபல தயாரிப்பாளர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த படத்தின் கேரளா உரிமத்தை பிரபல மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.‌தமிழக உரிமத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றி உள்ளார்.

'திருச்சிற்றம்பலம்' படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடிக்கிறார்கள்.

Priya bhavani Shankar played a game for Thiruchitrambalam Movie

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

Priya bhavani Shankar played a game for Thiruchitrambalam Movie

இந்நிலையில் தற்போது பிரபலமாகி வரும் 10/10 விளையாட்டை பிரியா பவானி சங்கர் விளையாடும் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Priya bhavani Shankar played a game for Thiruchitrambalam Movie

திருச்சிற்றம்பலம் படம் பற்றிய 10 கேள்விகளுக்கு பிரியா பவானி சங்கர் 10க்கு எத்தனை பதில்கள் அளித்துள்ளார் என்பதே இந்த விளையாட்டின் சுவாரஸ்யம் ஆகும். இந்த விளையாட்டில் பிரியா பவானி சங்கர் 6 கேள்விக்கு சரியான பதில் அளித்துள்ளார்.

இந்த படத்தில் ரஞ்சனி எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

 

Also Read | தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம்.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம்!

தொடர்புடைய இணைப்புகள்

Priya bhavani Shankar played a game for Thiruchitrambalam Movie

People looking for online information on Dhanush, Priya Bhavani Shankar, Thiruchitrambalam Movie will find this news story useful.