Viruman Logo Top
www.garudabazaar.com

அடடே.. தனுஷின் ‘நானே வருவேன்’ படத்துல இந்த ‘இளம் Bigg Boss பிரபலமா..?’ வைரல் பதிவு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் நானே வருவேன்.

Bigg Boss contestant in dhanush naane varuven viral pic

Also Read | Brahmastra முதல் பாகம்.. சித் ஸ்ரீராம், ஜோனிதா குரலில் சிலிர்க்க வைக்கும் ‘தேவா தேவா’ பாடல்.!

அசுரன், கர்ணன் படங்களை தயாரித்த கலைப்புலி தாணுவின் V Creations தயாரிக்கு இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

கடந்த ஆண்டு படப்பிடிப்பு துவங்கிய இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மேயாத மான் இந்துஜா நடிக்கிறார். ஓம் பிரகாஷ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.

Bigg Boss contestant in dhanush naane varuven viral pic

மிக அண்மையில் நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நானே வருவேன் படக்குழு தனுஷின் லுக் இடம் பெற்ற இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது. 'இறுதிக்கட்ட பணியில்' இப்படத்தின் பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் அந்த போஸ்டரில் தகவல் இடம் பெற்றிருந்தது.

இந்த நிலையில் நானே வருவேன் படத்தில் தனுஷுடன் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடித்துள்ளார். இதுகுறித்து டப்பிங் முடிந்து இயக்குனர் செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தை அவரே பதிவு செய்துமுள்ளார்.

Bigg Boss contestant in dhanush naane varuven viral pic

ஆம், அவர் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஆஜித். இவர்தான் தற்போது தமது சோசியல் மீடியாவில், “டப்பிங் பணிகள் முடிந்துள்ளது” என குறிப்பிட்டு இயக்குநர் செல்வராகவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இவருடைய இந்த பதிவு தற்போது தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.

Also Read | "படம் ரிலீஸ் ஆக கூடாதுனு சிலர் வேலை பார்த்தாங்க.." - Cadaver படம் குறித்து Amala Paul

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss contestant in dhanush naane varuven viral pic

People looking for online information on Bigg boss, Bigg Boss Tamil, Dhanush, Naane Varuven, Selvaraghavan, Vijay Television will find this news story useful.