www.garudabazaar.com

'Love Today' ரிலீஸ்.. உருக்கமான அறிக்கை வெளியிட்டு இயக்குனர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் 'லவ் டுடே' படத்தின் ரிலீஸை முன்னிட்டு நெகிழ்ச்சியான அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Pradeep Ranganathan Statement about Love Today Release

Also Read | Varisu : "டாப் 2 இடமும் தளபதி விஜய் தான்".. 5 நிமிசத்துல ரஞ்சிதமே படைத்த சாதனை..

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி'. இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர். ஐசரி கணேஷ் தயாரித்த இந்த படத்துக்கு ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். காமெடி டிராமாவாக உருவான இந்த படத்தை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டினர். வசூல் ரீதியாகவும் கோமாளி படம் வெற்றியடைந்தது.

Pradeep Ranganathan Statement about Love Today Release

கோமாளி படத்தை தொடர்ந்து பிரதீப், லவ் டுடே படத்தை இயக்கி உள்ளார்.  நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இந்த படம் வெளியாகி உள்ளது. 'லவ் டுடே' படத்திற்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கலை வடிவமைப்பை எம்கேடி கையாண்டுள்ளார்.

Pradeep Ranganathan Statement about Love Today Release

கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இன்று (நவம்பர் 4, 2022) இப்படம் வெளியாகி உள்ளது.

Pradeep Ranganathan Statement about Love Today Release

இந்நிலையில் இயக்குனர், நடிகர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் ரிலீஸை முன்னிட்டு நெகிழ்ச்சியான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "லவ் டுடே திரைப்படம் 3 வருட கனவு. இதை எனது இரண்டாவது 'முதல் படம்' ஆக செய்ய தேர்வு செய்தேன். இந்தப் பயணத்தில் நான் பல உணர்ச்சிகளைக் கடந்து வந்திருக்கிறேன், அவை எல்லாம் மறக்க முடியாதவை. லவ் டுடே ரிலீஸ் ஆகப் போகிறது & ஒரு பயணம் முடிவடைகிறது & புதிய பயணம் தொடங்கப் போகிறது என்பதை உணர்ந்ததும் எனக்கு கலவையான உணர்வுகள் ஏற்படுகிறது. "ஐ லவ் யூ லவ் டுடே". என்னை நேசிப்பவர்கள் மற்றும் என்னை விரும்பாத அனைவரையும் நான் நேசிக்கிறேன். லவ் டுடே இனி என்னுடையது அல்ல, உங்களுடையது. அதை நான்  உங்களுக்காக செய்தேன். நன்றி ஏஜிஎஸ், கல்பாத்தி எஸ்.அகோரம் சார், நீங்கள் இல்லாமல் எதுவும் இல்லை. நிறைய அன்பு, பிரதீப் ரங்கநாதன்". என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Also Read | Bigg boss : "மல்லிப்பூ" பாட்டுக்கு டான்ஸ் ஆடிய குயின்ஸி .. மாஸ் காட்டிய ஜனனி.. 😍

தொடர்புடைய இணைப்புகள்

Pradeep Ranganathan Statement about Love Today Release

People looking for online information on Love today, Love Today Release, Pradeep Ranganathan will find this news story useful.