''படையப்பா படம் பார்க்கும் போது...'' - 'கோமாளி' பட இயக்குநருக்கு கிடைத்த சூப்பர் கிஃப்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'கோமாளி'. இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்  இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி K.கணேஷ் தயாரிக்க, பிரதீப் ரங்க நாதன் இயக்கியிருந்தார்.

Comali fame Pradeep Ranganathan's Shares about padayappa and KS Ravikumar

மேலும் ஹிப்ஹாப் தமிழாவின் இசையில் பாடல்கள் படத்துக்கு மிகப் பெரும் பலமாக அமைந்திருந்தது. இந்த படத்துக்கு ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, ஷாரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, பிரபல இயக்குநர் எனக்கு தங்க செயின் பரிசளித்தார். படையப்பா நிறைய முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இதனை கனவுல கூட நினச்சுப் பார்க்க வில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor