www.garudabazaar.com

பிக்பாஸிருந்து வெளியேறிய சனம்... விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு..."இது சதிதான் என்று.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில்  கடுமையான போட்டியாக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் செட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

popular vijay tv vj on sanam eviction பிக்பாஸிருந்து வெளியேறிய சனம்

இந்நிலையில் இதுபற்றி பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மற்றும் இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தற்போது கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது "சனம் வாக்களிப்பால் வெளியேறினாரா? திட்டமிட்டு அனுப்பப்பட்டாரா? இது எல்லார் மனதிலும் எழுந்திருக்கிறக் கேள்வி! பலருக்கு சந்தேகமே இல்லை.. இது சதிதான் என்று அடித்துச் சொல்கிறார்கள். நான் பார்த்த, விசாரித்த, ஆய்வுசெய்த வகையில் அவருக்கு மக்களிடம் பெருத்த ஆதரவு இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகியது. பின் ஏன் அனுப்பப்பட்டார்? என்ன காரணம்? தயாரிப்பாளர்களுக்கு என்ன வியூகம், நோக்கம் என்பது விளங்கவில்லை" என்று கூறியுள்ளார்.

பிக்பாஸிருந்து வெளியேறிய சனம்... விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு..."இது சதிதான் என்று.." வீடியோ

popular vijay tv vj on sanam eviction பிக்பாஸிருந்து வெளியேறிய சனம்

People looking for online information on Biggboss4tamil, Sanam will find this news story useful.