பிரபல இசைக்கலைஞர் மரணம் அடைந்தார்... அடுத்தடுத்து மரணிக்கும் கலைஞர்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் கொஞ்ச நாட்களாகவே பல துக்க நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதிலும் பல கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் விசு, நடிகர் சேதுராமன், பறவை முனியம்மா போன்றோர் மரணம் அடைந்தனர். இந்நிலையில் அடுத்த துக்க செய்தி மக்களை தாக்கியுள்ளது.

பிரபல இசைக்கலைஞர் மரணம் அடைந்தார் சோகத்தில் ரசிகர்கள்popular musician dies ft prakash hariharan ft d imman

இசையமைப்பாளர் டி.இமானின் எண்ணற்ற பாடல்களுக்கு இசையமைத்த மாண்டலின் இசைக்கலைஞர் பிரகாஷ் ஹரிஹரன் தற்போது மரணம் அடைந்துளளர். இந்த துக்க செய்தியை தனது டிவிட்டர் தளத்தில் பதிவிட்ட இசையமைப்பாளர் இமான் கூறும்போது "இந்த இறப்பு மிக சீக்கிரம் . எனது பல பாடல்களில் எலக்ட்ரிக் மாண்டலின் இசைக்கருவி வாசித்தவர். இந்த செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor