மருத்துவரின் மரணம்.. புதைக்க அனுமதிக்காத சோகம் - காரணம் என்ன.? - பா.ரஞ்சித் பளீச்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பா.இரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்மையில் உயிரிழந்த மருத்துவர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

மருத்துவர் மரணம் பா.இரஞ்சித் கருத்து | director pa ranjith opens on coronavirus and recent doctor's death

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து மே-3 வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் காலமான மருத்துவரின் உடலை புதைக்க மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் இயக்குநர் பா.இரஞ்சித் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில், ''கொரோனா தொற்றின் அச்சம் மக்களிடையே அதிமாகி கொண்டிருப்பதை,  நோய்தொற்றால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததை கொண்டே புரிந்து கொள்ள முடியும்.  இச்சம்பவம் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களின் உள்ளத்தில் பெரூம் மன இறுக்கத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது. மருத்துவர்களின் மனநிலையை புரிந்து அவர்களின் வேதனையை போக்க துணை நிற்ப்போம். இறந்தவர்களின் உடலில் இருந்து நோய் தொற்று ஏற்படாது என்ற விழிப்புணர்வை உண்டாக்குவோம்!'' என அவர் தெரிவித்துள்ளார். 

 

Entertainment sub editor