RIP : கொரோனாவிற்கு அடுத்த பலி... பிரபல இசை கலைஞர் மரணம் அடைந்தார் - துக்கத்தில் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்உலகின் பல பகுதிகளிலும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதன் பரவலை தடுக்க வரும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்களை வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.
![கொரோனாவிற்கு அடுத்த பலி பிரபல இசை கலைஞர் மரணம் அடைந்தார் Popular Musician dies because of corona virus கொரோனாவிற்கு அடுத்த பலி பிரபல இசை கலைஞர் மரணம் அடைந்தார் Popular Musician dies because of corona virus](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-musician-dies-because-of-corona-virus-news-1.jpg)
இந்த கொடூர நோயினால் பல பிரபலங்களும், கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலரது இறப்பு செய்திகள் ரசிகர்களின் மனதை உலுக்கி விடுகிறது. அப்படி ஒரு செய்தி தான் இது. புகழ்பெற்ற இசை கலைஞராகிய மேத்யூ செலிகம் தற்போது கொரோனா நோயினால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64.The Soft Boys, A Can of Bees, Underwater Moonlight போன்ற பல இசை குழுக்களில் பணியாற்றியுள்ளார். இவருக்கு பல ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவரது நண்பரும் மற்றோரு இசை கலைஞருமான ராபின் இது பற்றி அறிவித்துள்ளார் "மேத்யூ இன்று நம்மை விட்டு பிரிந்தார். அடுத்து யார் என்று தெரியவில்லை. எல்லாரும் போக தான் போகிறோம் ஆனாலும் அவர் இப்படி நம்மை திடீரென்று நிர்கதியாக விட்டு செல்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்று கூறியுள்ளார்.