''இந்த படத்தை கோடி தடவை பார்த்தாலும் அலுக்காது'' - தனுஷ் படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாக செயலாற்றி வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார்.

Popular Music Director appreciates Dhanush Power Paandi movie ft. Sean Rolden | தனுஷின் படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல இசைமைப்பாளர் ஷான் ரோல்ட

அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' முதல் சமீபத்தில் வெளியான 'அசுரன்', 'பட்டாஸ்' வரை படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகள் மூலம் ரசிகர்களை அசரடித்து வருகிறார் தனுஷ். அவரது நடிப்பில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ஜகமே தந்திரம்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கின்றன.

நடிகர் தனுஷ் முதன் முதலாக இயக்கிய படம் 'ப.பாண்டி'. ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்த இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில் ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், ப.பாண்டி பட போஸ்டரை  பகிர்ந்து, ''இந்த படத்தை கோடி தடவை பார்த்தாலும் அலுக்காது. நடிகர் தனுஷின் எவர் கிரீன் படைப்பு'' என்று புகழாரம் தெரிவித்துள்ளார். அதற்கு 'சில்லுக்கருப்பட்டி' பட இயக்குநர் ஹலீதா ஷமீம், ''இந்த படத்தின் பாடல்கள் தனக்கு விருப்பமானவை'' என்று கமெண்ட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Popular Music Director appreciates Dhanush Power Paandi movie ft. Sean Rolden | தனுஷின் படத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல இசைமைப்பாளர் ஷான் ரோல்ட

People looking for online information on Dhanush, Pa. Paandi, Sean Roldan will find this news story useful.