''உங்களிடம் சொன்னார், நீங்க தான் கேட்கல'' - சுஷாந்த் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் குறித்த காரணங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை. அவர் நீண்ட நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

Popular Cricketer shares about Sushant Singh Rajput's death ft Sreesanth | பிரபல கிரிக்கெட் வீரர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து உருக்கம

இதனையடுத்து மக்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பதிவுகளை எழுதி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவை எழுதியுள்ளார்.

அதில், ''அவர் ஏன் தான் மன அழுத்தத்தில் இருப்பதாக எப்பவுமே சொல்லவில்லை. அவர் சொன்னார். அவர் மருத்துவரிடம் சென்ற போது, வெளியில் வருவதை  நிறுத்திய போது, தூக்கத்திற்காக மாத்திரை சாப்பிட்டபோது, அவர் உங்களிடம் சொன்னார். நீங்க தான் கேட்கவில்லை. 

மன அழுத்தம் அமைதியானது அல்ல. அது மிகவும் சத்தமானது. நீங்க கேட்க முயன்றால் மட்டுமே அது சத்தமாக இருக்கும். மன அழுத்தத்தில் இருப்பவர் நம்பிக்கை இழந்திருப்பார். அவர் கோபத்திலும், சோகத்திலும் இருக்க மாட்டார். அவர் மனதின் உள்ளே மரணித்திருப்பார்.

உங்கள் நெருக்கமானவர்களை கவனியுங்கள். எல்லோரும் நீங்கள் அறியா எதுவோ ஒன்றிற்காக போராடிக்கொண்டிருப்பார்கள். அன்பாக இருங்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Why didn’t he ever tell us that he was depressed? He did, when he started seeing a therapist, when he stopped going out, when he stopped feeling hungry, when he started taking pills to sleep, when he started crying all the time. He told you, you didn’t listen. Depression isn’t quiet, it’s loud. It’s loud enough if you want to hear it. The person who is suffering isn’t being a victim, he is unable to feel that he will ever be happy again. He has lost hope. He isn’t sad or angry, he is dead on the inside. When a depressed person says he doesn’t want to wake up because sleeping feels better. It’s sad and not something that should be held against him. Keep a check on your people ! Everyone is fighting a battle you know nothing about Be kind! Have empathy.

A post shared by Sree Santh (@sreesanthnair36) on

தொடர்புடைய இணைப்புகள்

Popular Cricketer shares about Sushant Singh Rajput's death ft Sreesanth | பிரபல கிரிக்கெட் வீரர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து உருக்கம

People looking for online information on Sreesanth, Sushant Singh Rajput will find this news story useful.