சிக்கலில் நடிகை... மதத்தின் பெயரால் வெட்டுக்கிளி தாக்குதலை ஆதரிப்பதா? - குமுறும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இதனையடுத்து இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை ஓயும் முன்பாகவே, அடுத்த பிரச்சினையாக தலை தூக்கியுள்ளது வெட்டுக்கிளிகள்.  இதனையடுத்து நாளுக்குநாள்  பரபரப்பான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் 'தங்கல்' பட நடிகை ஜாய்ரா வாசிம் குர்ஆனிலிருந்து பதிவிட்ட ஒரு பதிவு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சிக்கலில் நடிகை மதத்தின் பெயரால் வெட்டுக்கிளி தாக்குதலை ஆதரிப்பதா? Popular actress Zaira Wasim is criticised for her post on locust

"ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், ரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்" குர்ஆன் 7:133 என்று அவர் பதிவிட்டார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். வெட்டுக்கிளிகள் செய்யும் அட்டகாசங்களை பார்த்து விவசாயிகள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர். இந்த நிலையில் அதனை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் நியாயப்படுத்துவதாக போன்ற பதிவுகளை வெளியிட்டனர்.  உடனே அவர் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்ட்டாகிராம் பக்கங்களை டெலிட் செய்தார். இந்நிலையில் இன்று மீண்டும் அவற்றை பயன்படுத்த துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிக்கலில் நடிகை மதத்தின் பெயரால் வெட்டுக்கிளி தாக்குதலை ஆதரிப்பதா? Popular actress Zaira Wasim is criticised for her post on locust

People looking for online information on Corona, Locust, Zaira Wasim will find this news story useful.