நடிகர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க மாட்டேன் - வாய்ப்பை மறுத்த பிரபல நடிகை... என்ன காரணம்..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது அழகாலும் அதிரடியான நடிப்பாலும் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகை வைஜெயந்திமாலா. தமிழ் சினிமாவில் என்றும் அவருக்கு ஒரு சிறந்த இடம் இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே திருமணத்திற்கு பின்பும் அவரை இயக்குனர்கள் பலரும் தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்தனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க அழைக்கப்பட்ட போது அவர் மறுத்து விட்டாராம். இந்த செய்தியை நடிகர் ரஜினிகாந்த் ஒரு மேடையில் பகிர்ந்து உள்ளார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகைPopular actress rejects Superstar Rajinikanth film for this reason

அவரது நடிப்பில் பிளாக்பஸ்டர் ஆன படம் 'மாப்பிள்ளை'. இந்த படத்தில் மாமியார் வேடத்தில் நடிக்க அவரை அழைத்தபோது அவர் முடியாது என்று மறுத்து விட்டாராம். படக்குழுவினர் தரப்பில் மிகப்பெரிய தொகை கொடுப்பதாக கூறப்பட்ட போதிலும் அவர் வேண்டவே வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். இதற்கு காரணம் அந்த படத்தில் மாமியார் கேரக்டருக்கும், நடிகர் ரஜினிகாந்த் கேரக்டருக்கும் மோதல் ஏற்படும், எனவே "நான் ரஜினிகாந்தை திட்ட முடியாது" என்று நடிகை வைஜெயந்திமாலா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பின்பு அந்த கேரக்டரில் ஸ்ரீவித்யா நடித்தார். அதே படம்  நடிகர் ரஜினிகாந்தின் மருமகன் நடிகர் தனுஷ், ஹன்சிகா மற்றும் மனிஷா கொய்ராலா கூட்டணியில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகைPopular actress rejects Superstar Rajinikanth film for this reason

People looking for online information on Mappillai, Rajinikanth, Vyjayanthimala will find this news story useful.