Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

"28 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் படத்தில்".. பொன்னியின் செல்வன் படத்தின் வேற லெவல் MAKING VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர்  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

Ponniyin Selvan Movie Making BTS Video from Tharrani

Also Read | அஜித் நடிக்கும் 'துணிவு'.. படத்தில் இணைந்த 'வலிமை' பட டெக்னீசியன்! இவரா?

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

Ponniyin Selvan Movie Making BTS Video from Tharrani

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

Ponniyin Selvan Movie Making BTS Video from Tharrani

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

Ponniyin Selvan Movie Making BTS Video from Tharrani

இந்நிலையில் இன்று பொன்னியின் செல்வன் படத்தின் மற்றொரு உருவாக்க வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் கலை இயக்குனர் தோட்டா தரணி தோன்றி படப்பிடிப்பு தளங்கள் மற்றும் செட் அமைப்பு பணிகள் குறித்து விவரிக்கிறார் மேலும் 28 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் படத்தில் பணிபுரிவதாகவும் கூறியுள்ளார். மேலும் செட் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஆரம்ப கட்ட பணிகளை பேப்பரில் வரைவதாகவும் கூறியுள்ளார்.

Also Read | அஜித் நடிக்கும் 'துணிவு'.. பர்ஸ்ட் லுக் போஸ்டரை டிசைன் பண்ணது இவர் தானா? செம்ம தகவல்

"28 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் படத்தில்".. பொன்னியின் செல்வன் படத்தின் வேற லெவல் MAKING VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan Movie Making BTS Video from Tharrani

People looking for online information on Mani Ratnam, Ponniyin Selvan Movie updates, Ponniyin Selvan part 1 will find this news story useful.