Viruman Logo Top
www.garudabazaar.com

Ponniyin Selvan : பொன்னி நதி ஹிட்டுக்கு பிறகு.. வெளியான இரண்டாவது சிங்கிள் அப்டேட்.. "எப்போ ரிலீஸ்?"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்து தற்போது அப்டேட் வெளியாகி உள்ளது.

Ponniyin selvan part 1 second single update

Also Read | ஐரோப்பிய சுற்றுப்பயணம்.. அடுத்த நகருக்கு சென்ற விக்னேஷ் சிவன் & நயன்தாரா! வைரல் வீடியோ!

புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், ரஹ்மான், அஸ்வின் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.

Ponniyin selvan part 1 second single update

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி விட்டது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், ரவி வர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் முதல் சிங்கிள் என அனைத்தும் வெளியாகி, மக்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும், "பொன்னி நதி" என்ற முதல் சிங்கிள், ஏ.ஆர். ரஹ்மான் குரலில் வெளியாகி இருந்த நிலையில், இன்று வரை பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்ததுடன் ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட் ஒன்று தற்போது அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.

Ponniyin selvan part 1 second single update

வெற்றி கொண்டாட்டமாக இந்த பாடல் கருதப்பட்டுள்ள நிலையில், 'சோழா சோழா' என்ற இந்த பாடலை, பொன்னி நதி பாடலை தமிழில் எழுதி இருந்த இளங்கோ கிருஷ்ணன் தான் எழுதி உள்ளார். மேலும், பாடகர்களான சத்ய பிரகாஷ், VM மஹாலிங்கம் மற்றும் நகுல் அப்யங்கர் உள்ளிட்டோர் இந்த பாடலை பாடி உள்ளனர். பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இரண்டாவது சிங்கிளான 'சோழா சோழா', வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்த பாடல் வெளியிடப்படுகிறது. பொன்னி நதி பாடல், பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளதால், இரண்டாவது சிங்கிள் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | INDIAN 2: இயக்குனர் ஷங்கரின் பிறந்தநாள்.. தனக்கேயுரிய பாணியில் வாழ்த்திய உலகநாயகன் கமல்ஹாசன்!

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin selvan part 1 second single update

People looking for online information on AR Rahman, Maniratnam, Ponniyin Selvan part 1, Ponniyin selvan part 1 second single will find this news story useful.