Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

Ponniyin Selvan : "இன்னொரு Period ஃபிலிம் மட்டும் வேணாம்".. ஷூட்டிங் நடுவுல த்ரிஷா எடுத்த முடிவு.. Exclusive!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு அதே பெயரில் இரண்டு பாகங்களாக திரைப்படம் இயக்கி வருகிறார் மணிரத்னம்.

ponniyin selvan actors exclusive interview about movie

Also Read | வெங்கட் பிரபு - நாகசைதன்யா இணையும் புதிய படம்.. வெளியான அதிரடி அப்டேட்!!

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் 1" செப்டம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். லைகா நிறுவனம் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

ponniyin selvan actors exclusive interview about movie

சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், ஷோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, பார்த்திபன் ஆகியோர் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி மணிமேகலை தொகுத்து வழங்கினார். மேலும், நட்சத்திரங்கள் அனைவரும் பல சுவாரஸ்ய தகவல்களை பொன்னியின் செல்வன் திரைப்படம் தொடர்பாக பகிர்ந்து கொண்டனர்.

ponniyin selvan actors exclusive interview about movie

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை த்ரிஷா, "ஒரு 10, 15 நாட்கள் படப்பிடிப்பு சென்ற பின்னர், இனி அடுத்து பீரியட் ஃபிலிம் சத்தியமாக நடிக்க மாட்டேன் என நினைத்துக் கொண்டேன். ஆனால், நிறைய விஷயங்கள் புதிதாக இருந்தது. நிறைய விஷயங்களை சவாலுடன் ரசித்தபடியே செய்தோம்" என கூறினார்.

தொடர்ந்து, தான் ராஜ ராஜ சோழனாக நடிக்க போவது பற்றி இயக்குனர் மணிரத்னம் சொன்னதும் தனது ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பது பற்றி பேசிய நடிகர் ஜெயம் ரவி, "ஏதோ Surreal தருணமாக இருந்தது. அதன் பின்னர் மணி சார் நிஜமாக தான் சொல்கிறாரா என அவரிடமே மீண்டும் கேட்டு உறுதி செய்தேன். அவர் அப்படி சொன்னதும் மிகவும் சந்தோசமாக இருந்தது.

ponniyin selvan actors exclusive interview about movie

என்னுடைய சிறு வயதில், எனது தாய் ஒரு கதையாக இதனை சொல்லி தந்திருக்கிறார். வாடகை சைக்கிள் வாங்கி பொன்னியின் செல்வன் புக்கை படிப்பதாக எனது தந்தை கூறி உள்ளார். அதன் பெருமை எனக்கு தெரியும். அப்படி இருக்கையில், நான் பொன்னியின் செல்வனாக நடிக்கிறேன் என்பது ஒரு Surreal தருணமாக இருந்தது" என்றார்.

ponniyin selvan actors exclusive interview about movie

மேலும், பல சுவாரஸ்ய தகவல்களை பொன்னியின் செல்வன் படத்தின் நட்சத்திரங்கள், Behindwoods நேயர்களுக்காக பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பான முழு வீடியோவைக் காண:

Also Read | Ponniyin Selvan : சிவகுமார் நடிச்சிருக்க வேண்டிய "பொன்னியின் செல்வன்" கேரக்டர்.. உடைத்த கார்த்தி.!

PONNIYIN SELVAN : "இன்னொரு PERIOD ஃபிலிம் மட்டும் வேணாம்".. ஷூட்டிங் நடுவுல த்ரிஷா எடுத்த முடிவு.. EXCLUSIVE!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

ponniyin selvan actors exclusive interview about movie

People looking for online information on Jayam Ravi, Karthi, Ponniyin selvan actors exclusive interview, Ponniyin Selvan part 1, Trisha Krishnan, Vikram will find this news story useful.