www.garudabazaar.com

"மன்னிக்க".. 'இரவின் நிழல்' திரைப்படத்தின் OTT ரிலீஸ் தாமதம் குறித்து பார்த்திபன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இரவின் நிழல்' திரைப்படத்தின் ஒடிடி ஒளிபரப்பு தாமதம் குறித்த தகவலை பார்த்திபன் பகிர்ந்துள்ளார்.

Parthiban about Iravin Nizhal OTT Release Delay

Also Read | இமயமலையில் சுற்றுப்பயணம்.. ராயல் என்ஃபீல்டு பைக்கில் இயக்குனர் S.A. சந்திரசேகர்! செம்ம

இயக்குனர் நடிகர் பார்த்திபன் இயக்கத்தில்  வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ மற்றும் ‘ஒத்த செருப்பு’ ஆகிய  திரைப்படங்கள் பரவலாகக் கவனத்தைப் பெற்றன.

'ஒத்த செருப்பு' படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் நடித்து இயக்கிய திரைப்படம் 'இரவின் நிழல்'.

நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் 'நந்து' எனும் சினிமா பைனான்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தினை பார்த்திபனின் அகிரா பிலிம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ்  தயாரித்தது. இப்படத்தில் பார்த்திபன் நாயகனாக நடிக்க, ரோபோ ஷங்கர், வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சகா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்தனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்தார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்தார்.

கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கலைப்புலி தாணு கைப்பற்றி படத்தை ரிலீஸ் செய்தார்.

அத்துடன் இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம்பெற்று அங்கீகாரம் பெற்றது.

சில நாட்களுக்கு முன் நடிகர் பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில்  "காலை வணக்கம்!

அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும் ! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம். பார்ப்போம்!

நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!!" என படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை பகிர்ந்தார்.

இச்சூழலில் இயக்குனர் பார்த்திபன், தனது முகநூல் பக்கத்தில் இன்று ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "மன்னிக்க….

நானும் ஆவலுடனே காத்திருக்கிறேன்,but some technical issues it’s taking time-ன்னு Amazon-ல சொல்றாங்களாம்.மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டு தெரிவிக்கிறேன்.அதுவரை பொறுத்தருள்க

திரையரங்கில் நீங்கள் எனக்களித்த வரவேற்பே என்னைத்  திக்குமுக்காட வைத்தது.நான் பெரிதும் மதிக்கும் நீங்கள் OTT-யில் வர காத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளித்தாலும்,தாமதமாவதற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டு,ottயில் வருகையில் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்." என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

Also Read | கீர்த்தி சுரேஷூக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்த நண்பர்கள்.. ரசிகர்களை கவரும் சூப்பர் வீடியோ!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Parthiban about Iravin Nizhal OTT Release Delay

People looking for online information on இரவின் நிழல், Iravin nizhal, Iravin Nizhal OTT Release, R parthiban, Radhakrishnan Parthiban will find this news story useful.