www.garudabazaar.com

விபத்தில் சிக்கிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகர்!! .."அந்த Marriage காட்சி Shoot-க்கு வரும்போது".. viral post!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 

pandian stores actor accident before marriage shot viral post

சகோதர பாசம், கூட்டு குடும்பத்தின் நேசம், ஒற்றுமையான குடும்பம், விட்டுக்கொடுத்து வாழ்தல் உள்ளிட்ட வாழ்கையின் முக்கியமான உணர்வுகளை சுற்றி பயணிக்கும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்த சீரியல் பிற மொழிகளிலும் ரீமேக் ஆகி வருகிறது. மூர்த்தி, தனம், ஜீவா, கதிர், முல்லை, மீனா, கண்ணன் ஆகிய கதாப்பாத்திரங்கள் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரங்களாக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இவர்களுள் மூர்த்தி, ஜீவா, கதிர் ஆகிய 3 கேரக்டர்களுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில், கடைசி தம்பி கண்ணன் இப்போது வீட்டாருக்கு தெரியாமல் திருமணம் செய்ததால், அண்ணனின் கோபத்துக்கு ஆளாகியுள்ளார். இதனால் இந்த குடும்பத்தில் பெரும் பிரச்சனையே வெடித்து, கண்ணனை வீட்டை விட்டு வெளியே போக சொல்லிவிட்டார் மூத்த அண்ணன்.

இப்படி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த சிரீயலில் கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர்தான் சரவண விக்ரம். இவர்தான் அண்மையில்  விபத்தில் சிக்கி, ஆனாலும் காயத்தை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு தனது போர்ஷனை நடித்துக் கொடுத்ததாக, அவரது சொந்த தங்கையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சரவண விக்ரமின் தங்கை தமது பதிவில், “பாண்டியன் ஸ்டோர்ஸில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும அந்த திருமண காட்சியின் படப்பிடிப்பிற்கு வாகனம் ஓட்டிக்கொண்டு வரும்போது என் சகோதரர் ஒரு விபத்தில் சிக்கி காயமடைந்தார். ஆனாலும் அந்த வலியுடனே சென்று அடுத்த 4 மணி நேரத்திற்குள் மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றதுடன், தனக்கு ஏற்பட்ட விபத்து பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாமல் நடித்துக் கொடுத்துள்ளார்.

விபத்தினால அவரால் தற்போது இயல்பாக நடக்கமுடியவில்லை. ஆனால் அவரது நடிப்பு சிறுதளவும் மாறவில்லை. அவரது மன உறுதி பெருமைப் படவைக்கிறது. எப்போதும் என்னை ஊக்கப்படுத்துவது நீங்கள் தான் அண்ணா.. உங்கள் எல்லையற்ற அன்புக்கு நன்றி.  அவரது ரசிகர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

Also Read:அடக்கடவுளே! ஷூட்டிங்கில் விபரீதம்.. சம்பவ இடத்திலேயே இளைஞர் மரணம்!!.. சோகத்தில் படக்குழுவினர்!

தொடர்புடைய இணைப்புகள்

pandian stores actor accident before marriage shot viral post

People looking for online information on PandianStores, Trending, VijayTelevision, Vijaytv will find this news story useful.