777 Charlie Trailer

தனுஷின் நெருங்கிய தோழியாக.. மோஷன் போஸ்டரில் ஸ்டைலா கெத்தா மாஸ் காட்டிய நித்யா மேனன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருச்சிற்றம்பலம் படத்தின் பாரதிராஜா கேரக்டர் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Nithya Menen Shobana Character First Look Poster

நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

Nithya Menen Shobana Character First Look Poster

படத்தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், திருச்சிற்றம்பலம் படத்தின் நித்யா மேனனின் புதிய கேரக்டர் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. ஷோபனா எனும் கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். நெருங்கிய தோழி எனும் தலைப்புடன் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

Nithya Menen Shobana Character First Look Poster

ஏற்கனவே ராஸிகண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் போஸ்டர்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. விரைவில் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது. பாண்டிச்சேரி, சென்னை, புதுக்கோட்டை, குற்றாலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பை படக்குழு நடத்தினர்.

இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Nithya Menen Shobana Character First Look Poster

People looking for online information on Dhanush, Nithya Menen, Thiruchitrambalam will find this news story useful.