டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் 'ராட்சசி'. இந்த படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஸ்நீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சிகள் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. அதில், போராட்டம் செய்யும் ஆசிரியர்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார். அப்போது பேசும் அவர், சம்பளம் பத்தல, பணிப்பாதுகாப்பு என போராட்டம் செய்யும் நீங்க, சிஸ்டத்துல மாற்றம் வேணுமேனு என்னைக்காவது போராடிருக்கீங்களா ?'' என்று வசனம் பேசுகிறார்.
''சிஸ்டத்துல மாற்றம் வேணுமே'' - ஜோதிகாவின் ராட்சசி படத்தில் இருந்து வெளியான புது வீடியோ வீடியோ