ஜோதிகா நடிப்பில் வருகிற ஜூலை 5 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் 'ராட்சஷி'. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்ஆர் பிரகாஷ் பாபு, எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, கௌதம் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதனையடுத்து ஜோதிகா நடித்து வரும் படம் 'ஜாக்பாட்'. இந்த படத்தை 2 டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் சக்தி பிலிம் பேக்டரி தயாரித்து வருகின்றனர்.
இந்த படத்தில் ரேவதி, மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.. இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஆனந்தகுமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை கல்யாண் இயக்குகிறார். இந்த படத்துக்கு சென்சார் U சான்றிதழ் வழங்கியுள்ளது.