"அண்ணனுக்கு பர்த்டே"... பிரேம்ஜியின் அட்டகாசமான வாழ்த்து! ட்ரெண்டாகும் மாஸ் ஃபோட்டோ
முகப்பு > சினிமா செய்திகள்இசைஞானி இளையராஜாவின் மூத்தமகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார்.

தமிழ் சினிமாவில் மாணிக்கம், உல்லாசம், அலெக்சாண்டர், நாம் இருவர், நமக்கு இருவர், உள்ளம் கொள்ளை போகுதே, டும் டும் டும், ஆல்பம், ரகசியமாய், குடைக்குள் மழை, நெறஞ்ச மனசு, நாளை, மனதோடு மழைக்காலம், சகாப்தம் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து தனக்கான தனி ரூட்டையே உருவாக்கியவர் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.
மாற்று மொழியிலும் அவ்வப்போது கவனம் செலுத்தும் கார்த்திக் ராஜா எடுக்கும் வேலையை அப்பாவைப் போலவே கனக்கச்சிதமாக முடித்துக் கொடுப்பதில் கில்லாடி. இவருடைய தம்பி யுவன், தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இசையுலகில் தனி சாம்ராஜ்யம் அமைத்துள்ளார். யுவன், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, இவர்கள் மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவது வழக்கம். அதனால் இவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக. வலைதளங்களில் வெளியாகி வைரலாகும். ஆனால் கார்த்திக் ராஜா இருக்கும் இடம் தெரியாமல் வேலைகளை கவனித்துக்கொண்டிருப்பார். இவர்களோடு பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான்.
இந்நிலையில், கார்த்திக் ராஜாவின் பிறந்தநாளான இன்று பிரேம்ஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி ஆகியோர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படதை பதிவிட்டு "ஹேப்பி பர்த்டே கார்த்திக் அண்ணா", இது மியூசிக்கலி ஃபேமலி என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.