www.garudabazaar.com
iTechUS

பாமக நிறுவனர் ராமதாஸூடன் 'பகாசூரன்' இயக்குநர்.. பரிசாக கொடுத்த‌ ட்ரெண்டிங் புத்தகம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை பகாசூரன் படத்தின் இயக்குனர் மோகன் ஜி சந்தித்துள்ளார்.

Mohan G Meet PMK Ramadoss and Gifted Ponniyin Selvan Books

Images are subject to © copyright to their respective owners.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G,  ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Mohan G Meet PMK Ramadoss and Gifted Ponniyin Selvan Books

Images are subject to © copyright to their respective owners.

இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர்.

கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ரா தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Mohan G Meet PMK Ramadoss and Gifted Ponniyin Selvan Books

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார். பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் மோகன் ஜி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். "மருத்துவர் ஐயா அவர்களை இன்று சந்தித்த போது" என முகநூலில் மோகன் ஜி பதிவிட்டு ராமதாஸ் உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் இயக்குனர் மோகன் ஜி, ராமதாஸூக்கு பொன்னியின் செல்வன் புதினத்தை பரிசளிப்பது தெரிகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தின் அனைத்து பாகங்களையும் சேர்த்து தனித்தனி நூலாக மோகன் ஜி ராமதாஸூக்கு பரிசளித்துள்ளார். 

Mohan G Meet PMK Ramadoss and Gifted Ponniyin Selvan Books

Images are subject to © copyright to their respective owners.

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆனது. இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Mohan G Meet PMK Ramadoss and Gifted Ponniyin Selvan Books

People looking for online information on Mohan g, Pmk, Ponniyin Selvan will find this news story useful.