www.garudabazaar.com
iTechUS

தமிழ் சினிமாவில் PS1 போலவே மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் - 2.. இது வேறலெவல் சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் -2, படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Ponniyin Selvan PS2 Movie Releasing in IMAX

                      Images are subject to © copyright to their respective owners.

Also Read | சொந்த ஊரில் புது வீடு கட்டும் நடிகை நீலிமா.. குடும்பத்துடன் வெளியிட்ட சூப்பர் PHOTOS!

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

Ponniyin Selvan PS2 Movie Releasing in IMAX

Images are subject to © copyright to their respective owners.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படம் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் அதற்குரிய திரையரங்குகளில் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ponniyin Selvan PS2 Movie Releasing in IMAX

Images are subject to © copyright to their respective owners.

IMAX திரைகளில் இந்த பொன்னியின் செல்வன் படம் திரையிடப்பட உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ​​

IMAX திரையரங்குகளில் படம் பார்க்க சாதாரண திரையரங்குகளை விட மூன்று மடங்கு கூடுதலாக டிக்கெட் கட்டணத்தை திரையரங்குகள் வசூலிக்கின்றன.  அதற்கு காரணம் பிரம்மாண்டமான திரைகளும் பிரத்யேக சப்தங்களுமே. IMAX என்பது உயர்-தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள், திரைப்பட வடிவங்கள், ஃபிலிம் ப்ரொஜெக்டர்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியவற்றின் தனியுரிமை அமைப்பாகும்.

இதில் உயரமான அகண்ட திரைகளுடன் (Aspect Ratio 1.43:1 அல்லது 1.90:1) அதிக இருக்கைகள் கொண்ட மிகப் பெரிய திரைகளைக் கொண்ட தியேட்டர்களும் அடங்கும்.

Ponniyin Selvan PS2 Movie Releasing in IMAX

Images are subject to © copyright to their respective owners.

ஹைதராபாத்தில் உள்ள பிரசாத் ஐமேக்ஸ் தியேட்டர் இந்தியாவில் சிறந்த IMAX ஆக உள்ளது. அதன் 72-அடி உயரம், 95-அடி அகல திரை உடன் 635 இருக்கைகள் மற்றும் 12,000-வாட் ஒலி அமைப்பு சிட்னி ஐமாக்ஸ் திரையரங்கிற்கு அடுத்து மிகப்பெரிய IMAX திரை இது தான். உலகின் இரண்டாவது பெரிய IMAX 3D திரை ஆகும்.

தமிழ் சினிமாவில் முதல்முறையாக பொன்னியின் செல்வன் படம் ஐமேக்ஸ் வடிவத்தில் ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகமும் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ளது.

Also Read | "PARALLEL UNIVERSE".. தளபதி 67 படத்தை வாழ்த்திய கைதி தயாரிப்பாளர்.. TRENDING

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin Selvan PS2 Movie Releasing in IMAX

People looking for online information on Ponniyin Selvan, PS2, PS2 Movie update will find this news story useful.