’வானம் கொட்டட்டும்’ படத்தில் இருந்து வெளியான ‘Easy Come Easy Go’ பாடல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் 'வானம் கொட்டட்டும்'. இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டியன், நந்தா, சாந்தனு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Mani Rathnam's Manirathnam Vaanam Kottattum Easy Come Easy Go Sid Sriram Video Song

இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து கதை எழுதி, தனா இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படைவீரன்’ திரைப்படத்தை இயக்கியவர். ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் மூலம் சென்சேஷனல் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் இருந்து ஏற்கெனவே அனைத்து பாடல்களும் வெளியாகிவிட்ட நிலையில் தற்போது Easy come Easy Go என்ற பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த பாடலை சிவா ஆனந்த் எழுத, சித் ஸ்ரீராம், சஞ்சீவ் T, MADM, தபாஸ் நரேஷ் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். ’வானம் கொட்டட்டும்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வர உள்ளது.

’வானம் கொட்டட்டும்’ படத்தில் இருந்து வெளியான ‘EASY COME EASY GO’ பாடல் வீடியோ! வீடியோ

Entertainment sub editor