இயக்குநர் மணிரத்னம் பட டீமுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகை!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 21, 2019 04:31 PM
இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் கதை எழுதி தயாரிக்கும் படம் வானம் கொட்டட்டும். இந்த படத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் இணைந்து நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தை மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய தனசேகரன் இயக்குகிறார். ஏற்கெனவே இவரது இயக்கத்தில் படைவீரன் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு சகோதரியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நீண்ட இடைவெளிக்கு பின் சரத்குமாரும், ராதிகாவும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்நிலையில் நடிகை ராதிகாவுக்கு இன்று பிறந்தநாள். இதனை முன்னிட்டு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.