மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Mani Ratnam's next production venture Vaanam Kottattum First look poster released

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் பிரபு நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டியன், நந்தா, சாந்தனு, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குநர் மணிரத்னம் கதை எழுதி அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் தனா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படைவீரன்’ திரைப்படத்தை இயக்கியவர். ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் மூலம் சென்சேஷனல் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை, டீசர், டிரைலர் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.