LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
www.garudabazaar.com

ரஜினி - நெல்சன் இணையும் ஜெயிலர்.. கோதாவில் களமிறங்கும் பிரபல மலையாள நடிகர்.. அசத்தல் அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் இயக்கத்தில் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 'ஜெயிலர்' படத்தில் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள், தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது.

malayalam actor vinayakan join rajinikanth jailer movie

Also Read | ‘வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...’ - பாடிய அனிருத் .. பார்த்து ரசித்த ரஹ்மான்.! வீடியோ

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக 'அண்ணாத்த' திரைப்படம், கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது.

அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில், 'ஜெயிலர்' படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ளது பற்றி ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் என நெல்சன் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வித்தியாசமான கதைக் களத்துடன் இயங்கி இருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, அவரது நான்காவது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பும் தற்போது நெல்சனுக்கு கிடைத்துள்ளது.

malayalam actor vinayakan join rajinikanth jailer movie

அந்த வகையில், ஜெயிலர் படத்தின் போஸ்டர் ஒன்று, கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷால்ட் அன்ட் பெப்பர் லுக்கில், இந்த போஸ்டரில் தோன்றி இருந்தார். அது மட்டுமில்லாமல், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி இருந்ததையும் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் இணைந்துள்ள நடிகர், நடிகைகள் குறித்த விவரத்தினை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தங்களின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

malayalam actor vinayakan join rajinikanth jailer movie

அதன் படி, படையப்பா திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன், ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணைந்துள்ளார். அதே போல, நடிகர் யோகி பாபுவும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளார். இவர் நெல்சன் இயக்கத்தில், இதற்கு முன்பு வெளியான மூன்று திரைப்படங்களிலும் நடித்திருந்தார். ரஜினியுடன் தர்பார் திரைப்படத்திலும் யோகி பாபு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

malayalam actor vinayakan join rajinikanth jailer movie

இது தவிர, தரமணி, ராக்கி திரைப்படங்கள் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமான இளம் நடிகர் வசந்த் ரவியும் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளார். மேலும், மலையாள திரைப்படங்கள் மூலம், தென் இந்திய சினிமாவில் அதிக கவனம் ஈர்த்த நடிகர் வினாயகனும் ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார். தமிழில், திமிரு, சிலம்பாட்டம், மரியான் உள்ளிட்ட திரைப்படங்களிலும் வினாயகன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

malayalam actor vinayakan join rajinikanth jailer movie

ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகளின் விவரம் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர்.

Also Read | 20 வருசத்துக்கு அப்புறம்.. ரஜினி படத்தில் இணைந்த பிரபல நடிகை.. வெளியானது ஜெயிலர் அப்டேட்!!

தொடர்புடைய இணைப்புகள்

malayalam actor vinayakan join rajinikanth jailer movie

People looking for online information on Jailer, Malayalam actor vinayakan, Nelson Dilipkumar, Rajinikanth, Vinayakan, Vinayakan in Jailer Movie will find this news story useful.