Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

கொல மாஸ் லுக்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. வெளியானது ஜெயிலர் படத்தின் FIRST LOOK போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : ரஜினிகாந்த் - நெல்சன் இணையும் ஜெயிலர் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Super Star Rajinikanth Jailer Movie First Look Poster

Also Read | மாஸ்.. "பொன்னியின் செல்வன்" தெலுங்கு ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்!

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படம் கடந்த ஆண்டு (04.11..2021) தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படத்தில் லிவிங்ஸ்டன், பாண்டியராஜன், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்து இருந்தனர். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. 

Super Star Rajinikanth Jailer Movie First Look Poster

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த 169 வது படத்தை இயக்கும் வாய்ப்பு கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்தது. இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதில், ஒளிப்பதிவாளராக விஜய் கார்த்திக் கண்ணன் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் கார்த்திக் கண்ணன் ஏற்கனவே டாக்டர் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Super Star Rajinikanth Jailer Movie First Look Poster

இந்நிலையில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் தோன்றியுள்ளார். சாம்பல் & காக்கி நிற உடையில் சாம்பல் நிற பின்னணியில் Grey Tone-ல் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்தின் டைட்டிலும் சாம்பல் நிறத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மூக்கு கண்ணாடி மற்றும் கழுத்தில் வித்தியாசமான டாலர் கயிறுடன் ரஜினிகாந்த் தோற்றம் அமைந்துள்ளது.

Super Star Rajinikanth Jailer Movie First Look Poster

இன்று முதல் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது என அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | "8 வருஷத்துக்கு முன்னாடி இதே நேரத்துல".. திருமண நாளில் நஸ்ரியா வெளியிட்ட க்யூட் வீடியோ!!

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth Jailer Movie First Look Poster

People looking for online information on Jailer, Jailer Movie First Look Poster, Rajinikanth, Super Star Rajinikanth will find this news story useful.