www.garudabazaar.com

இதயமே நொறுங்கிடுச்சு!!.. இவ்ளோ சீக்கிரமா .. சித்தார்த் சுக்லா மரணம்.. நடிகர்கள் உருக்கம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் நடிகர் மற்றும் இந்தி பிக்பாஸ் 13வது சீசனில் வெற்றி பெற்றவருமான சித்தார்த் சுக்லாவின் திடீர் மறைவு திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

madhavan Tamannaah Raashi Khanna condolence Siddharth Shukla

சித்தார்த் சுக்லாவின் மறைவு குறித்து திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய நடிகை ஹன்சிகா மோத்வானி சித்தார்த் சுக்லாவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், மில்லியன் பேருக்கு பிடித்தமான ஒருவரான சித்தார்த் சுக்லாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகர் மாதவன் பேசும்போது, “இதயம் நொறுங்கியது, உங்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் சகோதரரே.. என் வேதனையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நடிகை தமன்னா, சித்தார்த் சுக்லாவின் மறைவு செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்து இருக்கிறார். இதேபோல் தற்போது அரண்மனை படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை ராஷி கண்ணா குறிப்பிடும்போது, “சித்தார்த் சுக்லாவின் மறைவு அதிர்ச்சி ஆனது.

அவருடைய ரசிகர்களுக்கும், இது பேரிழப்பு.. வாழ்க்கை யூகிக்க முடியாததாக இருக்கிறது” அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

Also Read: சோகம்!! இளம் பிக்பாஸ் வின்னர் & தமிழில் ஒளிபரப்பான பிரபல சீரியலின் நடிகர் மரணம்!

இதயமே நொறுங்கிடுச்சு!!.. இவ்ளோ சீக்கிரமா .. சித்தார்த் சுக்லா மரணம்.. நடிகர்கள் உருக்கம்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

madhavan Tamannaah Raashi Khanna condolence Siddharth Shukla

People looking for online information on Madhavan, Raashi Khanna, SiddharthShukla BiggBoss ripsidharthshukla, Tamannaah will find this news story useful.