Reliable Software
www.garudabazaar.com

சிம்புவின் மாநாடு ஷூட்டிங் ஸ்பாட் Viral ஸ்டில்ஸ்.. அதுல இதை நோட் பண்ணீங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதுடன் மாநாடுகளை போட்டு கட்சி கொள்கைகளை பற்றி மக்களிடத்தில் பேசி வருகின்றன.

Maanadu Simbu Premji Kalyani SAC viral shooting stills

இந்நிலையில் மாநாடு ஷுட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஸ்டில்கள் வைரலாகி வருகின்றனர். 'மாநாடு' திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ள பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி, சிம்பு, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கும் புகைப்படமும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியுடன் சிம்பு இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட ஸ்டேஜ் அமைத்து 'மாநாடு' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த வேளையில் வெளியான இந்த ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்லின் பின்புறம் எஸ்.ஏ.சந்திரசேகர் படம் பொறிக்கப்பட்ட வளையம் ஒன்று மாட்டப்பட்டுள்ளது. அதைச சுற்றி கட்சிக்கொடிக்கான வண்ணம் தெரிகிறது.

இதில் இருந்து எஸ்.ஏ.சி ஒரு முக்கிய அரசியல் வாதி கதாபாத்திரத்தில் தெறிக்க விடப் போகிறார் என்பது தெரிகிறது. யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ALSO READ: தல 'அஜித்தின்' வலிமை.. தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் தொடர்பான முக்கிய தகவலை வெளியிட்ட போனி கபூர்!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Maanadu Simbu Premji Kalyani SAC viral shooting stills

People looking for online information on K.Karunakaran, Kalyani Priyadarshan, Maanadu, Premji Amaran, SA Chandrasekar, Silambarasan TR will find this news story useful.