LATEST: மாநாடு படத்தின் மிரட்டலான சிம்பு - S J சூர்யாவின் புதிய தரமான போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெங்கட்பிரபு, சிம்புவை வைத்து 'மாநாடு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

maanaadu movie new poster starring STR & SJ Suriya

இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாள்கிறார்.

maanaadu movie new poster starring STR & SJ Suriya

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் நான்கு மொழிகளில் வரும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை அக்டோபர் 2 அன்று வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே டிவிட்டரில் அறிவித்துள்ளார். இந்த டிரெய்லருக்கான டப்பிங் பணிகள் ஏற்கனவே  முழுவீச்சில் நடந்து முடிந்தது. இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

maanaadu movie new poster starring STR & SJ Suriya

இந்நிலையில் இன்று இந்த படத்தின் டிரெய்லர் அறிவிப்பிற்கான பிரத்யேக போஸ்டர் வெளியாகி உள்ளது. மோனோ குரோமேட்டிக்கில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. எஸ்.ஜே சூர்யா, சிம்புவின் முகம் இணைந்து போஸ்டரில் அமைந்துள்ளது. சிம்புவின் கண் கண்ணாடியில்,  எஸ்.ஜே சூர்யா, கையில் துப்பாகியுடன் சிம்புவை குறிபார்க்கும் படமும்,  எஸ்.ஜே சூர்யாவின் கண் கண்ணாடியில், சிம்பு கையில் துப்பாகியுடன் எஸ்.ஜே சூர்யாவை குறிபார்க்கும் படமும் அமைந்து புதுவிதமாக காட்சியளிக்கிறது.

maanaadu movie new poster starring STR & SJ Suriya

போஸ்டரே படத்தின் தரத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முதன்மை கருவி என்பதை நிருபிக்கும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

maanaadu movie new poster starring STR & SJ Suriya

People looking for online information on S J Suriya, Silambarasan TR, Venkat Prabhu will find this news story useful.