www.garudabazaar.com

DEEPAVALI RACE: அண்ணாத்த உடன் தீபாவளிக்கு வெளியாக தயாரான மாநாடு! தலைவர் vs தலைவன்! முழு தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த 2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.

silambarasan tr maanaadu releasing date announced

இயக்குனர் வெங்கட்பிரபு,சிம்புவை வைத்து இந்த 'மாநாடு' படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர்களுடன் எஸ்.ஜே. சூர்யா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம் ஜி அமரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் எடிட்டிங்கை பிரவின் K.L கையாள்கிறார்.

silambarasan tr maanaadu releasing date announced

இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த இந்த திரைப்படம் எப்பொழுது திரைக்கு வரும் என சினிமா ரசிகர்களும், சிம்பு ரசிகர்களும் காத்து இருந்தனர். இந்நிலையில் 'மாநாடு' திரைப்படம் வருகிற தீபாவளிக்கு நவம்பர் 4 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் இதே தீபாவளி நாளில் தான் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வருகிற தீபாவளி கலைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாத்த படத்தின் மோஷன் போஸ்டரும், முதல் லுக் போஸ்டரும் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

silambarasan tr maanaadu releasing date announced

People looking for online information on Maanaadu, Silambarasan TR, Venkat Prabhu will find this news story useful.