www.garudabazaar.com

உதயநிதி - மாரி கூட்டணியில் 'மாமன்னன்' படப்பிடிப்பு நிலவரம் என்ன? லேட்டஸ்ட் Update.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டே திரைப்படங்களை இயக்கி, பெரிய அளவில் தன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கியவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.

Maamannan next schedule shooting update chennai and salem

அவர் இயக்கிய இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்திருந்தன. இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினை வைத்து 'மாமன்னன்' என்னும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

இதில், உதயநிதி ஸ்டாலினுடன் வடிவேலு, பகத் ஃபாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.  இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனமே தயாரிக்கிறது. மேலும், மாமன்னன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

ஏற்காடு மற்றும் சேலத்தில் ஷூட்டிங்

மாமன்னன் படத்தின் அறிவிப்பு தொடர்பாக வெளியான போஸ்டரில், வடிவேலுவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரது பெயர் தான் முதலில் இடம்பெற்றிருந்தது. அதே போல, இந்த படத்தில் வடிவேலு அரசியல்வாதியாக நடிப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு, கடந்த மார்ச் மாதம் ஏற்காட்டில் வைத்து தொடங்கி நடைபெற்று வந்தது.

இதற்கு அடுத்தபடியாக, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சேலத்தில் வைத்து நடைபெற்று வந்த நிலையில், இதுவும் முடிவடைந்ததாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் அறிவித்திருந்தார். அதே வேளையில், இந்த இரண்டு கட்ட படப்பிடிப்பின் போது வடிவேலு, பகத் உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படங்களும் பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

அடுத்து ஷூட்டிங் எப்போ??

இந்நிலையில், மாமன்னன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்கள் படி, சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்ததாக சென்னையில் வைத்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பும், இதனைத் தொடர்ந்து சேலத்தில் வைத்து இறுதி கட்ட படப்பிடிப்பும் நடைபெறும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

இந்த இரண்டு கட்ட படப்பிடிப்புகளிலும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொடர்புடைய இணைப்புகள்

Maamannan next schedule shooting update chennai and salem

People looking for online information on AR Rahman, Fahadh Faasil, Keerthy Suresh, Maamannan, Mari Selvaraj, Udhayanidhi Stalin, Vadivelu will find this news story useful.