www.garudabazaar.com

"ஒரு சின்ன பிரேக் .." லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த ட்வீட்.. உச்சகட்ட ஆவலுடன் Waiting'ல் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தாண்டு வெளியான தமிழ் திரை படங்களில், மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த திரைப்படங்களில் ஒன்று 'விக்ரம்'.

Lokesh kanagaraj latest tweet about his break from social media

உலகநாயகன் கமலஹாசனுடன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றிருந்தது.

அது மட்டுமில்லாமல், வசூல் ரீதியிலும் இந்த திரைப்படம் சக்கை போடு போட்டு, பல்வேறு திரைப்படங்களின் கலெக்ஷன் சாதனைகளையும் முறியடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே போல, இந்த திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் லெவலுக்கு வேற உயரத்திற்கு சென்று சேர்ந்தது. இதற்கு முன்பு அவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய ஒவ்வொரு திரைப்படங்களும், மிக மிக வித்தியாசமாக மக்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. விக்ரமும் அதே அளவில், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Lokesh kanagaraj latest tweet about his break from social media

இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து மீண்டும் ஒரு திரைப்படம் இயக்குவது பற்றி, பிஹைண்ட்வுட்ஸ் விருது மேடையில் சொல்லாமல் சொல்லி இருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  விரைவில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Lokesh kanagaraj latest tweet about his break from social media

இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் அனைத்து சோசியல் மீடியா பிளாட்ஃபார்மிலிருந்து  சிறிய இடைவேளை ஒன்றை எடுத்துக் கொள்ளப் போகிறேன். எனது அடுத்த திரைப்படம் குறித்த அறிவுப்புடன் விரைவில் நான் உங்களை சந்திக்கிறேன். அதுவரை அனைவரும் நன்றாக உங்களை பார்த்துக் கொள்ளுங்கள். அன்புடன் லோகேஷ் கனகராஜ்" என குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் கொடுத்த மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் காரணமாக, லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க உள்ள திரைப்படம் குறித்த அறிவிப்பை ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி காத்து வருகிறார்கள்.

Lokesh kanagaraj latest tweet about his break from social media

அப்படி ஒரு சூழ்நிலையில், லோகேஷ் தற்போது செய்துள்ள ட்வீட், நிச்சயம் வெகு விரைவில் அவர் படம் தொடர்பான பணிகளை முடித்துவிட்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளியிடுவார்கள் என்றும் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Lokesh kanagaraj latest tweet about his break from social media

People looking for online information on Lokesh Kanagaraj, Vikram will find this news story useful.