LKG பட பாணியில் ஒரு நிஜப் போராட்டம்... வெச்சு செய்த 'RJ Balaji'... சிரிச்சே செத்துடுவீங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

LKG படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இவரது அடுத்த படமான 'மூக்குத்தி அம்மன்' முடியும் தருவாயில் இருக்கிறது. இதில் 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.

ஆர்.ஜே.பாலாஜியின் LKG பட பாணியில் கொரோனா வைரஸ் எதிர்ப்பு l RJ Balaji Shares A Recreation Of His LKG Comedy Scene Against Corona Virus

"இது 100 சதவீதம் பக்தி படம்" என்று அறிவித்த ஆர்.ஜே.பாலாஜி. 90-களில் நாம பார்த்த பக்தி படங்களில் நாம் பார்த்த விஷயங்களை ஞாபகப்படுத்தும் விதமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறியுள்ளார். எது எப்படியோ 90-ஸ் கிட்ஸ்களுக்கு 'கோமாளி' படத்திற்கு பிறகு செம ட்ரீட் இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில்   ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "நோயே நோயே..! ஓடிப் போ நாயே..!" என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை ஷேர் செய்தார். அந்த வீடியோ தான் செம காமெடி.

LKG படத்தில் அவர் ஒரு காட்சியில் கண்ணுக்கு தெரியாத நோயை எதிர்த்து போராடுவது போல் ஒரு சீன் இருக்கும். அந்த காட்சியை உண்மையாக்குவது போல் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு சிலர் அட்டைகளை பிடித்துக் கொண்டு கொரோனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இதனை ஷேர் செய்த அவரை, நெட்டிசன்கள் 'நீங்கள் ஒரு தீர்க்கதரிசி' என்று புகழ்ந்து வருகின்றனர்.

Entertainment sub editor