'பாப்பாவை தூங்க வைக்க, அப்பா மாதிரி பண்றாங்களாம்.! - பிரபல ஹீரோவின் மகள்.. செம க்யூட் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹீரோவின் மனைவி அவரது குழந்தைகளின் க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். 

பிரபல ஹீரோவின் குழந்தைகள் க்யூட் வீடியோ | kgf star yash's wife radhika pandit shares a cute video of their childrens

2018-ஆம் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப். யஷ் நடித்த இத்திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்க, மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் சஞ்சய் தத், ரவினா டாண்டன் உள்ளிட்டோ நடிக்கின்றனர். 

இந்நிலையில் யஷ்ஷின் மனைவி ராதிகா பண்டிட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட் வீடியோவை பகிர்ந்துள்ளார். அண்மையில் பிறந்த அவரது மகனை தூங்க வைக்க, மகள் செய்யும் சேட்டைகளை அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், ''இன்றோடு எங்கள் மகள் 18 மாதங்களை நிறைவு செய்கிறாள். எங்கள் குழந்தையை எப்படி பார்த்து கொள்கிறாள் பாருங்கள். இவள் என் அப்பாவை இமிடேட் செய்கிறாள் என்பதை உறுதியாக சொல்வேன்'' என பதிவிட்டுள்ளார். 18 மாதங்களே ஆனாலும், தம்பியை கொஞ்சி விளையாடும் இந்த க்யூட் அக்காவின் வீடியோவை நெட்டிசன்கள் ரசித்து வருகின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

பிரபல ஹீரோவின் குழந்தைகள் க்யூட் வீடியோ | kgf star yash's wife radhika pandit shares a cute video of their childrens

People looking for online information on Kgf 2, Radhika Pandit, Yash will find this news story useful.