www.garudabazaar.com

போடு! முதல்ல தனுஷ்.. இப்போ கேஜிஎப் இயக்குநர்.. பாராட்டு மழையில் விஷ்ணு விஷாலின் புதிய படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். நீர் பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, சிலுக்குவார் பட்டி சிங்கம், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வித்தியாசமான கதையினை தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷால் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான ராட்சசன் படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.

KGF film director praised after watching FIR film on social media

அவரது நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் FIR. இயக்குநர் மனு ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.  விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் என 3 நாயகிகள் நடித்துள்ளனர். இயக்குனர் கௌதம் மேனன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இப்படத்திற்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.  அருள் வின்சென்ட் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ளார். கமர்ஷியல்  திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் 2022 பிப்ரவரி 11 உலகம் முழுவதும் வெளியாகிறது.

KGF film director praised after watching FIR film on social media

இந்தப் படத்தில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக நடித்துள்ளார் விஷ்ணு விஷால். FIR திரைப்படம் திரையரங்கில் வெளிவருவதற்கு முன்பே பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. திரை பிரபலங்கள் பலரும் பாராட்டியுள்ளன. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது. கேரளாவில் E4 என்டர்டைன்மென்ட் படத்தை வெளியிடுகிறது. இதேபோல் தெலுங்கு, கன்னட உரிமைகளும் ஹாட் கேக்காக விற்பனையாகியுள்ளன. இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

பிரபலங்கள் பாராட்டு

தனுஷ் படம் பார்த்து விட்டார்.  ராட்சசன் படத்தை தாண்டி இந்தப்படத்தில் ஒரு நடிகராக மிரட்டி விட்டீர்கள் என்று பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது' என்று ட்ரைலர் வெளியீட்டு விழாவில் விஷ்ணு விஷால் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து  கேஜிஎப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் FIR படத்தின் ட்ரலைரை பார்த்து படக்குழுவிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். Great Trailer என்று சமூகவலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

KGF film director praised after watching FIR film on social media

தொடர்புடைய இணைப்புகள்

KGF film director praised after watching FIR film on social media

People looking for online information on Dhanush, FIR, FIR Trailer, Goutham Vasudev Menon, KGF Director, Pra, Prashanth Neel, Vishnu Vishal will find this news story useful.