www.garudabazaar.com

கொசுக்கடியில் சினிமா ஷூட்டிங்.. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்து புதிய PAN INDIA படத்தின் BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Shared Dasara Movie Shooting BTS Image

Also Read | "சில நேரங்களில் தேவையானது இதுதான்".. மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினி.. உருக்கமான ஃபோட்டோஸ்.

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.   தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார். கடைசியாக மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.

Keerthy Suresh Shared Dasara Movie Shooting BTS Image

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  13 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.3 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தசரா படத்தின் BTS போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் "எனக்கு பிடித்த காம்போ: நைட் ஷூட்கள் மற்றும் எனது காபி! மேலும் எனக்கு விருப்பமில்லாத புதிய சேர்த்தல்.. இந்த பெரிய கொழுப்பு கொசு!!! சில நேரங்களில் அவை காஃபினை விட தூங்கவிடாமல் சிறப்பாக செயல்படுகின்றன! #தசரா" என பதிவிட்டுள்ளார்.

Keerthy Suresh Shared Dasara Movie Shooting BTS Image

மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இத்திரைப்படம் நடிகர் நானியின் முதல் பன்மொழி இந்திய திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது. ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி  மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்ட காட்சித்துணுக்கு சமீபத்தில் வெளியானது.

Keerthy Suresh Shared Dasara Movie Shooting BTS Image

சத்யன் சூரியன் ISC ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

Also Read | "நீங்க உங்க Ex கூட.." கரண் ஜோஹர் கேட்ட பரபரப்பு கேள்வி.. கொஞ்சம் கூட அசராம ஜான்வி சொன்ன பதில்

தொடர்புடைய இணைப்புகள்

Keerthy Suresh Shared Dasara Movie Shooting BTS Image

People looking for online information on கீர்த்தி சுரேஷ், தசரா, Dasara Movie, Dasara Movie Shooting, Keerthy Suresh will find this news story useful.